Apartment in terms of Vastu
நேற்று வாஸ்து ரீதியாக அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்து குடியிருந்தால் என்ன நன்மைகள்?. அதனால் என்ன பாதகங்கள் சார்ந்த விஷயங்களை பார்த்தோம். இன்றைய பதிவில் ஒரு இடம் வாங்கி தனிப்பட்ட முறையில் வீடு கட்டும் பொழுது என்ன நன்மைகள் என்ன° பாதகங்கள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தனிப்பட்ட முறையில் வீடு கட்டும் பொழுது நன்மைகள் என்று பார்க்கும் பொழுது நமது விருப்பத்திற்கு தகுந்தார் போல சிறிய அளவிலோ பெரிய அளவிலோ கட்டிக் கொள்ளலாம். எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். தோட்டங்களை அமைத்துக் கொள்ளலாம். வீட்டில் ஒரு பகுதியை நமது சவுகரியத்திற்காக வாடகைக்கு விடலாம். அந்த வாடகை மூலமாக வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். மனித வாழ்க்கைக்கு முக்கிய தேவை உணவு, உடை, இருப்பிடம். ஆக உணவிற்கும் ஆடைகளுக்கும் வீட்டு வாடகை பயன்படும். இருப்பிடத்திற்கு நமக்கு ஒரு வீடு கிடைத்துவிடும். பாதகங்கள் என்று பார்க்கின்ற பொழுது சட்ட சிக்கல் இல்லாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து புதிய பணத்தில் வாங்க வேண்டும். வீடு கட்டும் பொழுது ஒரு சில வேலைகளை நாம் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு பொருளாக கடைகடையாக ஏறி இறங்க வேண்டும் அல்லது, இன்ஜினியர் மேஸ்திரி மூலமாக கட்டினாலும் சில அலைச்சல் நமக்கு இருக்கும். வீட்டு வரைபட அப்ரூவல், மின் இணைப்பு, தண்ணீர் குழாய் இணைப்பு போன்றவற்றை நாம் தான் அலைந்து திரிந்து வாங்க வேண்டும் . எப்படி இருந்தாலும் ஒரு வீடு கட்டும் பொழுது சிரமங்கள் இருக்கும். இதனைத் தான் நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். வீடு கட்டி பாருங்கள் கல்யாணம் செய்து பாருங்கள் என்று. ஆக கஷ்டப்பட்டாலும் அதனால் பாதகங்கள் இருந்தாலும், நமக்கு நன்மை என்பது கிடைக்கும். சொத்து சேர்க்கை என்பது கிடைக்கும்.
Yesterday, we looked at the advantages of living in an apartment building in terms of Vastu. So, we looked at the disadvantages. In today’s post, we will learn about the advantages and disadvantages of buying a plot of land and building a house on our own. When we look at the advantages of building a house on our own, we can build it on a small or large scale as per our wishes. We can expand it at any time in the future. We can set up gardens. We can rent out a part of the house for our comfort. We can make a living through that rent. The main needs of human life are food, clothing, and shelter. So, house rent is used for food and clothing. We get a house for shelter. When we look at the disadvantages, we should choose a place that does not have legal problems and buy it with new money. When building a house, we have to do some work ourselves. We have to go up and down the street for each item or, even if we build it through an engineer-meister, we will have some hassle. We have to go around and buy house plan approval, electricity connection, water pipe connection, etc. No matter what, there will be difficulties when building a house. This is what our ancestors have said. Build a house and get married. So even if there are difficulties and disadvantages, we will get benefits. We will get wealth. வாஸ்து ரீதியாக அடுக்குமாடி குடியிருப்பு ,Apartment in terms of Vastu,Is Vastu applicable for apartments?,Which facing is best for apartments?,Which floor is best to live in an apartment as per Vastu?,How to correct Vastu in flats?,