தொழிற்சாலை அமைக்கும்போது வாஸ்து / இன்று காலண்டர் 22.11.26.

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

தினசரி நாள்காட்டி 22-11-2026 பராபவ வருடம் கார்த்திகை மாதம் 6 ந்தேதி. ஞாயிற்றுக்கிழமை. நாளை விடியற்காலை 2.39 வரை வ. திரயோதசி திதி. பிறகு சதுர்தசி . நாளை விடியற்காலை 4.03 வரை அசுவினி பிறகு பரணி நட்சத்திரம். யோகநாள். சமநோக்கு நாள்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
————————
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am 7.30-10am
2-4.30pm 9-12pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 15
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.

___________________

இன்றைய பஞ்சாங்க விசேஷம் :

நாளை (

நவம்பர் 22, 2026, ஞாயிற்றுக்கிழமை) பானு பிரதோஷம் (ஞாயிறு பிரதோஷம்) வருகிறது. பிரதோஷ பூஜை நேரம் பொதுவாக மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை அமைகிறது.

——————————–

வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.

தொழிற்சாலை அமைக்கும்போது எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யவும், மூலப்பொருட்களைக் கொண்டு வரவும், வாகனங்கள் செல்லவும், அலுவலகம் அமைக்கவும் போதுமான இடவசதி இருக்க வேண்டும்.
வாஸ்து அடிப்படையில் மனையின் நான்கு மூலைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் ஒரு குறிப்பிட்ட மூலை திறந்தும், விரிவாகவும், சரியான அமைப்பிலும் இருப்பது மிகவும் அவசியம்.
அந்த மூலை இல்லாத மனையை வாங்கிவிட்டு, பின்னர் அதைச் சரிசெய்ய முயற்சிப்பதைவிட, இடம் வாங்குவதற்கு முன்பே தகுதியான வாஸ்து ஆலோசனை பெறுவது புத்திசாலித்தனம்.

அந்த முக்கியமான மூலை எது தெரியுமா?
அதுதான் மனையின் வடகிழக்கு மூலை!
ஒரு மனை வாங்குவதற்கு முன்பே வாஸ்து ஆலோசனை பெறுங்கள். அவசரப்பட்டு சொத்து வாங்கி பின்னர் வருத்தப்படாதீர்கள்.

_________________

 

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!