நான்கு நபர்கள் அல்லது ஐந்து அண்ணன் தங்கைகள் இருக்கின்றார்கள் அல்லது, நான்கு ஐந்து நபர்கள் ஒன்றாக இடம் வாங்கி ஒரு இடத்தைப் பிரிக்கின்றார்கள் என்று சொன்னால் , அப்படி பிரிக்கின்ற பொழுது அந்த இடம் நான்கு 5 பேருக்குமே நன்மையை செய்யுமா? என்று சொன்னால் நிச்சயமாக செய்யாது. அப்படி இருக்கின்ற போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால், நான்கு இடங்களை அவர் அவர்களுக்கு வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.ஆனால் ஒரு இடத்தை கார் பார்க்கிங் அமைப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் பொது காரணத்துக்காக இடமாக அல்லது அந்த வீடுகளுக்கு வேலை செய்கிற நபர்கள் இருக்கக்கூடிய இடமாக அல்லது பொதுவான ஒரு வாடகைக்கு விடுகிற ஒரு கட்டிடமாக மொத்த கட்டட அமைப்பில் நீங்கள் கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது நன்மையை செய்கிற ஒரு வாஸ்து வகையில் இருக்கும். ஆக ஒரு இடத்தை பிரிவினை செய்கின்ற பொழுது வாஸ்து அமைப்பு வைத்துக் கொண்டு பிரிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஐந்து நான்கு நபர்களுக்கும் வாஸ்து வகையில் யோகத்தை செய்கிற ஒரு இடமாக இருக்கும்.