ரயில் நிலையங்களுக்கு அருகில் வீடுகள் இருக்கலாமா? என்கிற ஒரு கேள்வியை அது சார்ந்த இடத்தில் இருக்கிற மக்கள் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ரயில் நிலையங்கள் என்பது மிக அருகாமையில் இருக்கின்ற பொழுது ஒரு அதிர்வலைகளை அங்கு வசிக்கிற மக்களுக்கு கொடுக்கும் அந்த அதிர்வலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய மனதையும், அவர்களுடைய மூளையையும் செயல் தன்மையும் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிற நிகழ்வு என்பது இருக்கும் குறிப்பாக எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னால் அருகில் இருந்து தூங்குகிற நேரத்தில் அந்த உணர்வுகள் இருக்கும். சாதாரணமாக விழித்திருக்கிற நேரத்தில் இருக்காது. ஆகவே வணிக ரீதியாக தாராளமாக இருக்கலாம். வீடுகள் கொஞ்சம் ரயில்வே ட்ராக் கண்ணில் தெரியாதவாறு 500 அடிகள் தள்ளி இருந்தால் நல்லது. எடுத்துக்காட்டாக இன்றைக்கு யூ டி எஸ் டிக்கெட் போடுகிறோம். அதற்கென்று ஒரு குறிப்பிட்ட தூரத்தை ரயில்வே பாதையில் இருந்து தள்ளி இருந்தால் மட்டுமே டிக்கெட் போடமுடியும். அதுபோல அந்த தூரம் என்பது நிச்சயமாக வேண்டும். அது வாஸ்து ரீதியாக யோகத்தை செய்கிற நிகழ்வாகவும் இருக்கும்.
Can houses be built near railway stations? People living in the area have asked me a question. In that sense, when railway stations are very close, those vibrations give off vibrations to the people living there, and gradually their minds, brains and actions are affected. Especially if you tell them where to stay, those feelings will be there while sleeping. They will not be there while they are awake. So it may be commercially generous. It would be better if the houses were 500 feet away so that the railway track is not visible. For example, today we are issuing UTS tickets. For that, tickets can be issued only if they are a certain distance away from the railway track. Similarly, that distance is definitely required. It will also be an event that performs yoga in terms of vastu.