வீட்டின் முன்புறத்தில் சாலைகளில் மரங்களை வைக்கலாமா? என்று ஒரு கேள்வியை வாஸ்து வகையில் கேட்டால் என்னை பொறுத்த அளவில் நெகடிவ்வான இடங்களில் மரத்தை வைக்கலாம். பாஸ்டிவான இடங்களில் மரத்தை வைக்க கூடாது என்று சொல்வேன். அந்த வகையில் தெற்கு சாலை இருக்க கூடிய இடங்களில் மரங்கள் வைப்பது நல்லது. அதேபோல மேற்கு சாலை இருக்கக்கூடிய இடங்களில் மரங்கள் வைப்பது நல்லது. வடக்கு சாலை இருக்கக் கூடிய இடங்களிலும், கிழக்குசாலை இருக்கக்கூடிய இடங்களிலும் வடக்கு பகுதியில், மேற்கு பகுதியில் தாராளமாக வைக்கலாம். கிழக்கு சாலையில் கிழக்கு சாலையில் தெற்கு பகுதியில் தாராளமாக வைக்கலாம். எந்த இடத்திலும் வடகிழக்கு பகுதியில் அது சாலையாக இருந்தாலும் சரி, உங்களுடைய வீட்டின் உட்புற பகுதி, வெளிபுறப்பகுதி எந்த இடமாக இருந்தாலும் சரி மரங்களை வைப்பது வாஸ்துவின் வகையில் தவறு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கின்ற மரங்களை சுற்றுச்சுவருக்கு மேலாக இருந்தால் அதை அப்புறப்படுத்துவது நலம் என்று சொல்லுவேன்.
If you ask a question in terms of Vastu, can trees be placed on roads in front of the house? According to me, trees can be placed in negative places. I would say that trees should not be placed in positive places. In that sense, it is better to place trees in places where there is a southern road. Similarly, it is better to place trees in places where there is a western road. In places where there is a northern road and in places where there is an eastern road, you can place them liberally in the northern and western parts. You can place them liberally in the eastern road and in the southern parts of the eastern road. You should know that placing trees in any place in the northeastern part, whether it is a road, or in the interior or exterior of your house, is wrong in terms of Vastu. If such trees are above the perimeter wall, I would say that it is better to remove them.