ஒரு சில மக்கள் வடக்கு வாசல் வீடு நல்லது, கிழக்கு வாசல் வீடு நல்லது என்று சொல்வார்கள். இந்த விஷயத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்வேன். இந்த விஷயமே பழைய காலத்தில் வேறு ஒரு நிகழ்வுக்காக அதாவது, இந்த சாஸ்திரம் தோன்றிய காலத்தில் வேறொரு நிகழ்வுக்காக சொல்லப்பட்ட விஷயம் ஆனால் இன்று அது வடக்கு வாசல் நல்லது, கிழக்கு வாசல் நல்லது என்கிற விதிக்கு அமைந்துவிட்டது. எந்த வீடாக எந்த வாசலாக இருந்தாலும், வடக்கில் அதிக இடங்களும், கிழக்கில் அதிக இடங்களும் வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நியதி. ஆனால் அன்று எதற்காக அந்த விதியை கொண்டு வந்தார்களோ, அந்த விதியை மறந்து விட்டு வடக்கு வாசல் வேண்டும், கிழக்கு வாசல் வேண்டும் என்கிற ஒரு விஷயத்தை சொல்லுகின்றார்கள். ஒரு சில இடங்களில் தெற்கு வாசல் வீடுகளும், மேற்கு வாசல் வீடுகளும், வடக்கு கிழக்கு வாசல்களை விட மிகப்பெரிய யோகத்தை செய்கிற இடங்களாக வைத்திருக்கும். ஆக இதை தெரிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று சொல்வேன். மனம் போன போக்கில் வடக்கு மட்டும் வேண்டும், கிழக்கு மட்டும் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதை விடவேண்டும். தெற்கும் மேற்கும் யோகமான அமைப்பை வைத்திருக்கின்ற பொழுது தாராளமாக அதில் வீடு கட்டி சிறப்பாக வாழ முடியும். ஆக எல்லா வாசல்களும் நல்ல வாசல்களே. காலியிடங்கள் எங்கு இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர வாசல்கள் பிரதானம் கிடையாது. இதில் வாஸ்துவையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
Some people will say that a house with a north door is good, a house with a east door is good. I would say that this matter should be left aside. This matter was said in the old days for a different event, that is, when this Shastra was created, for a different event, but today it has become a rule that the north door is good, the east door is good. It is a rule that was established so that no matter what the door is, there should be more space in the north and more space in the east. But at that time, they forgot about the reason for bringing that rule and said that the north door should be good, the east door should be good. In some places, houses with a south door and houses with a west door are considered to be places where greater yoga is performed than the north and east doors. So I would say that a building should be built knowing this. One should stop searching for only the north or only the east in the mind. When the south and west have a good arrangement, one can freely build a house in it and live well. So all doors are good doors. The important thing is where the vacancies are, not the doorways. Vastu should also be taken into consideration in this.