வாஸ்து அபார்மெண்ட் வீடுகள் சென்னை

அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்குகின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது சரி என்று சொல்லுவேன். காரணம் என்னவென்றால் அதிகமாக அப்பார்ட்மெண்ட் வீடுகளை அந்த வரைபடம் தயாரிக்கிற வேலையை செய்கிறவர்கள் யார் என்று கேட்டால் ஆர்க்கிடெக்ட் படித்த மக்கள்தான். அவர்கள் எங்கே இருந்து இந்த வரைபடத்தின் நகல்களை எடுக்கிறார்கள் என்று சொன்னால் அதிகமாக ஐரோப்பிய நாடுகளின் கட்டிடக்கலை அமைப்பை காப்பி செய்கிறார் என்று தான் சொல்லுவேன். இது நமது மக்களுக்கு 95 சதவீதம் தெரியாது. ஏன் என்று சொன்னால் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை வீடுகளில் நாம் வசிப்பது கிடையாது. ஆக புதிதாக செய்ய வேண்டும் என்பதற்காக அங்கே இருந்து காப்பி எடுக்கிறார்கள். அது நமது வாஸ்து சாஸ்திர நிலைக்கு எதிரான செயலாக மாறிவிடுகிறது. காரணம் நமது ஊரில் வெப்பம் என்பது அதிகம். அதே சமயம் மேற்கூறிய நாடுகளில் வெப்பம் என்பது குறைவு. ஆக வெப்பம் என்பது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற வகையில் நமது ஊரில் செயல்படும். அதேசமயம் குளிர் நாடுகளில் பெரிய அளவில் செயல்படாது என்று சொல்லுவேன். ஆக வாஸ்து என்பது அவர்களுக்கா? நமக்கா? என்று சொன்னால் அவர்களுக்கும் செயல்படும். நமக்கும் செயல்படும். ஆனால் காந்தவிசையின் செயல்கள் மட்டும் இது நாடுகளுக்கும் ஒரே மாதிரி இருக்கும். சூரியனின் தன்மை என்பது இந்த மேற்குலக நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் மாறுபாடுகள் இருக்கும் என்பது உண்மை. இதனை தெரிந்து கொண்டு வாஸ்து நிகழ்வை பார்க்க வேண்டும். ஆக பாதி நிலையில் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் ஒத்துவரும். பாதி நிலையில் இரண்டு பகுதிகளுக்கும் ஒத்து வராது. இதனை வாஸ்துவில் கவனம் செலுத்தி ஒரு இல்லத்தை அமைக்க வேண்டும். வீடு என்பது நம்ம ஊரில் அமைத்தாலும் சரி, நமது மக்கள் மேற்குலக நாடுகளில் வீடு வாங்கினாலும் சரி, இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.அப்போது தான் வாஸ்து என்பது உங்களுக்கு கிடைக்கும்.

I would say that it is right to be a little careful when buying apartment houses. The reason is that if you ask who is doing the work of preparing the map of most apartment houses, it is people who have studied architecture. If you ask where they take copies of this map, I would say that they mostly copy the architecture of European countries. 95 percent of our people do not know this. If you ask why, we do not live in American, Australian and European architectural houses. So they take copies from there to make a new one. It becomes an act against our Vastu Shastra. The reason is that the heat is high in our city. At the same time, the heat is low in the above-mentioned countries. So if the heat is excessive, it will act in our city like nectar and poison. On the other hand, I would say that it will not work to a large extent in cold countries. So is Vastu for them or for us? If you ask, it will work for them too. It will work for us too. But only the actions of magnetic force are the same for all countries. It is true that the nature of the Sun varies between the Western and Eastern countries. Knowing this, one should look at the Vastu phenomenon. So, in half the position, it will be compatible with the Western and Eastern countries. In half the position, it will not be compatible with both regions. One should pay attention to this in Vastu and build a house. Whether the house is built in our village or our people buy a house in Western countries, this should be taken into account. Only then will you get Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!