
ஒரு கட்டிடம் கட்டுகின்ற பொழுது மூலமட்டம் என்கிற சதுரிப்பு கணக்கு மிக மிக முக்கியம். எப்படி என்று சொன்னால் ஒரு போக்கு திசையை முதலில் பரிந்துரை செய்ய வேண்டும் அதாவது, ஏற்கனவே ஒரு கட்டிடம் இருக்கிறது அதன் வரிசையில் என்றால் அந்த வரிசையை முதலில் பயன்படுத்த பார்க்க வேண்டும். ஒரு வேலை அந்த வரிசையை பயன்படுத்த நாம் வைத்திருக்கிற இடம் ஒத்து வரவில்லை என்று சொன்னால் அதை தவிர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு திசையை பிரதானப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பிரதானப்படுத்துகின்ற பொழுது இடத்தின் வடகிழக்கு எந்த இடத்திலும் சுருங்கக்கூடிய அமைப்பாக வந்து விடக்கூடாது. ஒரு இடத்தின் வடகிழக்கு கிழக்கு பகுதியையோ, வடகிழக்கு வடக்கு பகுதியையோ, கழித்து விடாமல் எடுக்கிற அமைப்பிற்கு இடத்தை ஒழுங்கு படுத்துவது என்பது சரியான முறையில் இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் தெற்கே பிரதானப்படுத்தியோ, மேற்கே பிரதானப்படுத்தியோ இடத்தை சதுரிக்க வேண்டும். அப்படி சதுரித்த பிறகு தென்கிழக்கு குறைவாகவோ, வடமேற்கு குறைவாகவோ இருக்கின்ற பொழுது தென்கிழக்கு குறைவாக இடம் விடுவது போல இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் ஒழுங்கு அமைப்பு இல்லாத இடங்களில் இடத்தை நாம் கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்துவது என்பது வாஸ்து ரீதியாக நல்ல பலன்களை கொடுக்கிற மனையாக அந்த மனை மாறிவிடும் . இதை கவனத்தில் கொண்டு ஒரு இடத்தில் கட்டிடம் கட்டும்போது வாஸ்து ரீதியாக செயல்பட வேண்டும்.
When constructing a building, the square calculation of the foundation is very important. How to say that, we should first recommend a direction, that is, if there is already a building in its row, we should try to use that row first. If a work says that the place we have reserved for using that row is not suitable, we should avoid it and make some direction the main one. When making it the main one, the northeast of the place should not come as a structure that can be contracted anywhere. The arrangement of the space for the structure that takes the northeast or the northeast of a place should be done in the right way. If we say no, we should make the space the main one, either the south or the west. After making it the main one, if the southeast or northwest is less, then we should take the space as if we leave less space for the southeast. This is how we use the space for building in places where there is no regular structure, that space becomes a plot that gives good results in terms of Vastu. Keeping this in mind, one should act in a Vastu-based manner when constructing a building in a place.