
வாஸ்து பார்த்து நீங்க முன்னேறலைன்னா, அது வாஸ்து சரியில்லைன்னு அர்த்தம் இல்ல. வாஸ்து ஒரு வழிகாட்டி, அது மட்டுமே ஒரு வாழ்க்கையை மாற்றும் சூத்திரம் இல்லை.மேலும் நான்கு விசயங்களை கவனிக்க வேண்டும்.அவைகளை வரிசை படுத்தி பார்த்தால் ஜோதிடம் மற்றும் நமது கர்மா மற்றும் நமது நடவடிக்கை மற்றும் இறைவன் சரணாகதி இவைகளை இணைத்து தான் மனித வாழ்க்கை.
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு கட்டட கட்டமைப்பு நிலையில் எங்கே எடை வேண்டும் எங்கே எடை வேண்டாம் என்று சொல்லும் விசயம்.. இது வீட்டின் அமைப்பு மற்றும் திசைகளைப் பற்றியது. வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரத்தின்படி சில விஷயங்களைக் கடைப்பிடித்தால், அது வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். ஆனால், வாஸ்து மட்டும் ஒருவரது வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுத்து விடும் என்று வேறு வாஸ்து நிபுணர்கள் சொன்னால் அது பொய்.
உங்க வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையென்றால், வாஸ்துவைத் தவிர வேறு பல காரணங்கள் இருக்கலாம். ஆக ஏற்கனவே நான் சொன்ன உங்கள் ஜோதிடம் மற்றும், நமது கர்மா , நடவடிக்கை உறவுகள் மற்றும் இறைவழிபாடு போன்றவற்றில் கூட கவனம் செலுத்த வேண்டும்.
வாஸ்துவைப் பின்பற்றுவது நல்லது தான், ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனை முழுவதும் ஏற்று கொள்ளுங்கள்.ஆனால் மற்ற விசயங்களை விட்டு விட கூடாது.
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு வழிகாட்டி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கடின உழைப்பு, விடாமுயற்சி, திறமை, மற்றும் நல்ல வாய்ப்புகள் ஆகியவை உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும் முக்கிய காரணிகள். அதற்கு வாஸ்து சரியாக இருந்தால் துணை செய்யும்.
வாஸ்துவை பின்பற்றி நீங்கள் வீடு கட்டினால், அது உங்களுக்கு ஒரு நேர்மறையான சூழலை தரலாம், அதனால் உங்களை வெற்றியாளராக மாற்றி வைக்கும்.
If you do not progress by looking at Vastu, it does not mean that Vastu is not correct. Vastu is a guide, it is not the only formula that will change a life. Four more things should be considered. If you look at them in order, astrology and our karma and our actions and surrender to God are combined, and human life is a combination of these.
Vastu Shastra is a thing that tells us where weight should be placed and where weight should not be placed in a building structure. It is about the structure and directions of the house. If you follow some things according to Vastu Shastra while building a house, it will increase the positive energy of the house. But, if other Vastu experts say that Vastu alone will give progress in one’s life, it is a lie.
If there is no progress in your life, there may be many reasons other than Vastu. So, as I have already mentioned, you should also pay attention to your astrology and our karma, action relationships and worship of God.
It is good to follow Vastu, but you should remember that it alone will not give progress in life. Accept this completely. But do not leave other things aside.
You should understand that Vastu Shastra is a guide. Your hard work, perseverance, talent, and good opportunities are the main factors that will bring progress in your life. If Vastu is correct, it will help you.
If you build a house following Vastu, it can give you a positive environment, which will make you a winner.