வாயு மூலை வாஸ்து

வாயு மூலை வாஸ்து

காற்று என்கிற ஒரு பூதம் மிகப்பெரிய பூதம். இந்த காற்று என்கிறபூதம் மனிதர்களில் ஜாதியை பார்த்தோ, இனத்தை பார்த்தோ, மதத்தை பார்த்தோ, அதாவது குலம் குணம் சமயம் என்று சொல்லக்கூடிய மனிதர்களை பார்த்து காற்று தன்னுடைய வேலையை செய்வது கிடையாது. இந்த இடத்தில் காற்று தான் பிரதானமாக வாஸ்துவில் முதன்மை வகிக்கிறது என்று கூட சொல்லுவோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு காற்றின் வேகம் என்பது ஒரு மாயாவி போல. இந்த இடத்தில் இயற்கையை கலங்கப்படுத்தி மாசுபடுத்தி காற்றை விஷம் செய்து கொள்ளக் கூடாது. அதிக மரங்களை செடிகளை ஒரு இல்லத்தில் இருக்க வேண்டிய இடத்தில் நட்டு வையுங்கள். பஞ்சபூதங்களில் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட மனிதன் காற்றை பொறுத்துதான் படகு ஓட்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டான். இந்தியாவிலேயே மிகப்பெரிய வியாபாரத்தில் வல்லமை பெற்ற மனிதன் தமிழன் என்று சொல்ல முடியும். அந்த காற்றை தெரிந்து கொண்டு தான் வியாபாரத்தை கடல் கடந்து செய்தார்கள். இன்றைக்கு தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த காற்று இல்லாமல் கிடையாது . ஆக காற்றை மரியாதை செய்யாமல் போனால் வாழ்க்கை என்கிற படகு முடிந்துவிடும். இந்த இடத்தில் காற்றின் இடமாக சொல்லக்கூடிய வாயு மூலையை எப்படி வடகிழக்கு ஈசானத்தை முதன்மைப்படுத்துகின்றோமோ, அதற்கு இரண்டாவது நிலையில் வைத்து நீங்கள் அந்த இடத்தை வாஸ்து விதிகளுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு இடத்தில் வளர்ச்சியை கொடுக்கிற இடம் வடகிழக்கு. அந்த வளர்ச்சி சரியான பாதையில் செலுத்துகின்ற இடமாக வடமேற்கு முடிகிறது. அதாவது படகுக்கு துடுப்பு போல. அதற்கு பிறகு அக்னி மூலை என்று சொல்லக்கூடிய அந்த மூலை உங்களுடைய வாழ்க்கையில் அகம் புறம் என்று சொல்லக்கூடிய இரண்டு நிலைகளிலும் சரியான முதலீடுகளை வைக்கிறது என்று சொல்லலாம். அதற்கு பிறகு நைருதி என்கிற தென்மேற்கு மூலை. உங்களுக்கு ஒரு நிறைவான வாழ்க்கையை கொடுத்திருக்கிறதா? என்கிற பதிலை சொல்லக்கூடிய இடமாக இருக்கிறது. ஆக வாஸ்துவில் நான்கு மூலைகள் முக்கியம். இந்த மூலைகளை உதாசனை படுத்த வேண்டாம். இதில் இடையில் இருக்கிற காற்று என்கிற மூலை உங்கள் வாழ்க்கை இடது பக்கமா? வலது பக்கமா? என்கிற நிலையில் உங்களை அழைத்துச் சென்று விடும் . அந்த இடத்தில் கவனம் என்பது மிக மிக முக்கியம். வாஸ்துவின் அந்த இடத்தில் அதாவது வாயுமூலையில் சமரசம் செய்ய வேண்டாம்.

The wind is a huge demon. This demon does not do its work by looking at people based on caste, race, or religion, that is, clan, character, or religion. We can even say that wind plays a major role in Vastu here. The speed of an invisible wind is like an illusion. Nature should not be disturbed and polluted in this place and poison the air. Plant more trees and plants where they should be in a house. The man who knew everything about the five spirits knew that he could sail a boat only with the wind. The man who was powerful in the biggest business in India can be said to be a Tamilian. They did business across the seas only by knowing that wind. Today, if we say that Tamils ​​are all over the world, it would not be without that wind. So if we do not respect the wind, the boat called life will end. In this place, just as we prioritize the air corner, which is the place of air, the northeast is the north, and you should bring that place to the rules of Vastu by placing it in the second position. In one place, the place that gives growth is the northeast. The northwest ends as the place that directs that growth in the right direction. That is, like an oar to a boat. After that, the corner, which can be called the fire corner, can be said to make the right investments in both the internal and external aspects of your life. After that, the southwest corner, which is called the south. It is the place where you can answer whether it has given you a fulfilling life. So, four corners are important in Vastu. Do not use these corners as examples. The air corner in between will take you to the position of whether your life is on the left side or the right side. Attention at that place is very, very important. Do not compromise at that place of Vastu, i.e. the air corner.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!