தென்கிழக்கு மூலை வாஸ்து
வாஸ்து வகையில் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு மூலை பிரதானம். அதாவது தென்மேற்கு மூலை எவ்வளவு முக்கியமோ, வடகிழக்கு மூலை எவ்வளவு முக்கியமோ? அதுபோல தென்மேற்கோடு இணைந்த ஒரு திசையாக தென்கிழக்கு மூலை இருக்கின்றது. அப்படிப்பட்ட தென்கிழக்கு மூலையில் எது வரலாம்? எது வரக்கூடாது? என்பதனை தெரிந்து வாஸ்து வகையில் ஒரு இல்லத்தை, ஒரு கட்டிடத்தை, ஒரு தொழிற்சாலையில் ஒரு நிறுவனத்தை அமைப்பது சாலச் சிறந்தது. இந்த இடத்தில் தென்மேற்கு தென்கிழக்கு திசையோடு, வடமேற்கை வடகிழக்கோடும் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்வது நலம். அந்த வகையில் தென்கிழக்கு மூலையில் படுக்கை அறை தாராளமாக வரலாம். அதை ரெகுலராக குடும்ப தலைவரோ குடும்பத் தலைவியோ பயன்படுத்துவது தவறு. அடுத்ததாக குளியலறை கழிவறைகள் கழிவு நீர் தொட்டி கிணறு போன்ற விஷயங்கள் வரக்கூடாது.அக்னி மூலை பள்ளமாக இருப்பது, போர்வெல் போன்ற விஷயங்கள் எக்காரணம் கொண்டு வரக்கூடாது. படிக்கட்டு என்று பார்க்கின்ற பொழுது மூலை படிக்கட்டு அந்த இடத்தில் வரக்கூடாது. வெளிப்புறம் மூடப்பட்ட படிக்கட்டுகளாகவும் இருக்கக் கூடாது. அதேபோல தென்மேற்கு மூலையில் வரக்கூடிய தண்ணீர் தொட்டி தென்கிழக்கு மூலையில் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. அக்னி மூலையில் சமையல் செய்வது எப்பொழுதுமே கிழக்கு பார்த்து சமைக்க வேண்டும். பூஜை அறை வரலாம். ஹோம் தியேட்டர் அறைகள் அங்கு வரலாம். அதே போல கழிவறைகள் அமைக்கின்ற பொழுது 50 சதவீதம் வாஸ்து பலனாகவும், வடமேற்கு வரும் பொழுது 100% வாஸ்து பலன் ஆக இருக்கும். தவிர்க்க முடியாத பட்சத்தில் அக்னி மூலை கழிவறைகளை அமைத்துக் கொள்ளலாம் ஆனால் பள்ளங்களாக அமைந்து விடக்கூடாது. இப்படி பட்ட விசயங்களை கவனித்து அக்னி மூலையில் வாஸ்து வகையில் சரியான முறையில் பொறுத்திக் கொள்ள வேண்டும்.
According to Vastu, the southeast corner is the main corner in a house. That is, how important is the southwest corner or how important is the northeast corner? Similarly, the southeast corner is a direction connected to the southwest. Knowing what can and cannot be placed in such a southeast corner, it is very good to establish a house, a building, or an institution in a factory according to Vastu. It is good to compare the southwest with the southeast direction and the northwest with the northeast. In this regard, the bedroom can be placed in the southeast corner. It is wrong for the head of the family or the head of the family to use it regularly. Next, things like bathrooms, toilets, septic tanks, wells should not be placed. Things like the fire corner being a pit, borewells should not be brought in for any reason. When it comes to stairs, corner stairs should not be placed in that place. They should not be closed stairs from the outside. Similarly, a water tank that can be placed in the southwest corner should not be placed in the southeast corner for any reason. Cooking in the fire corner should always be done facing the east. A puja room can be built there. Home theater rooms can be built there. Similarly, when constructing toilets, 50 percent Vastu benefits will be obtained, and when it comes to the northwest, it will be 100% Vastu benefits. If unavoidable, toilets can be built in the fire corner, but they should not be made into pits. Such things should be taken into account and the fire corner should be properly designed in terms of Vastu.