வடக்கு திசையும் கிழக்கு திசையும் சந்திக்கிற மூலை தான் வடகிழக்கு திசை என்று சொல்கின்றோம். இந்த மூலையில் எப்பொழுதுமே எடை என்பது இருக்கக் கூடாது. ஒருவர் தலை சுமையோடு எப்பொழுதுமே நடந்து கொண்டிருந்தால் ஒரு மனிதன் எவ்வளவு துன்பப்படுவானோ அதுபோல கட்டிடத்தின் பலன்களும் அங்கு வசிக்கிற மக்களின் மீது இருக்கும். வீடு மற்றும் வியாபார நிறுவனம் மற்றும் தொழிற்சாலை இதில் எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டுக்கும் பலன்கள் என்பது ஒரே வகை தான். ஒரு வீட்டில் பழைய கட்டிடங்களில் ஈசான மூலையில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி இருந்தால் ஈசானிய பாரமாகும். ஈசானிய மூலையில் உதிர்ந்த மரம் கூட இருந்தாலும் ஈசானிய பாரமாக மாறி விடும். அப்படி இருக்கின்ற இடங்களில் அந்த வீட்டில் இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு விபத்து சார்ந்த நிகழ்வுகளில் உயிர் கொடுக்குற நிகழ்வு நடந்திருக்கும். ஆக ஈசானிய தவறுகள் குடும்பத்தின் மூத்த குழந்தைகள் மீதும், குடும்ப ஆண்களின் மீதும் இருக்கும். அப்படி இருந்தால் ஆண்களுக்கு மன அழுத்தம் பள்ளி கல்வியை, கல்லூரி கல்வியை முடிப்பதில் தடை ஏற்படும். தகுதிகள் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காது . தனிமையை விரும்பி வாழ்கிற வாழ்க்கை வாழ்கின்ற ஆண்களாக ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆக ஈசானியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே ஒருவரின் வாழ்க்கை என்பது மனிதர்களோடு இணைந்தது தான் வாழ்க்கை. இதில் ஜாதி மதம் மொழி என்பது தடையாக இருக்கக் கூடாது. ஆனால் வீடு தடையாக இருந்தால் அவருடைய வாழ்க்கை வெற்றி என்பது மிக மிக சிரமம். ஆக யாரோடும் ஒன்றிய வாழ்க்கையை வாழ மாட்டார்கள். ஈசானியம் உங்களோடு ஒட்டி இருக்க வேண்டும் மற்ற கஷ்டங்களோடு ஒட்டி இருக்கக் கூடாது.
The corner where the north and east meet is called the northeast direction. There should never be any weight in this corner. Just as a person would suffer if he were to walk around with a heavy head, the benefits of the building would also be on the people living there. There is no difference between a house and a business establishment and a factory. The benefits of both are the same. In an old building, if there is an overhead water tank in the northeast corner, it will be an east-facing burden. Even if there is a fallen tree in the northeast corner, it will become an east-facing burden. In such places, there will be an event in that house where the young generation has lost their lives in some kind of accident. So, east-facing mistakes will be on the elder children of the family and on the men of the family. If that is the case, men will be pressured and will not be able to complete their school and college education. Even if they have qualifications, they will not get opportunities. They will establish themselves as men who prefer to live a life of solitude. So, east-facing should be taken into consideration. One’s life is always connected to people. Caste, religion, language should not be a barrier in this. But if home is a barrier, success in life will be very, very difficult. So they will not live a life together with anyone. Esaniyam should stick to you and should not stick to other difficulties.