Vastu Consultant Chennai Tips Today Live 20.02.2025

Vastu Consultant Chennai Tips Today

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

chatgpt #AI #Deepseek-Coder finetune #geminiai

தினசரி நாள்காட்டி 20.2.2025 குரோதி வருடம் மாசி மாதம் 08 ந் தேதி. வியாழக்கிழமை. காலை 9.59 வரை சப்தமி பிறகு தே.அஸ்டமி. மதியம் 1.14 வரை விசாகம் பிறகு அனுசம் நட்சத்திரம். யோகநாள் . சந்தரஷ்டமம் : ரேவதி. அசுவினி.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice :

வாயு திசையை தான் வடமேற்கு திசை என்று சொல்லுவோம். அதை மனதின் திசை என்று கூட கூறலாம். இந்த வாயு திசை என்பது காற்றோடு சம்பந்தப்பட்டது. இதனைக் கூட நமது பிரதமர் அவர்கள் மங்கி பாத் என்று சொல்லி மனதின் குரல் என்று அடிக்கடி வானோலியில் பேசுவார்கள். இந்த மூலை மனித மூளையோடு தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. வீட்டுக்கு ஒரு மூளை இருக்கிறது என்று சொன்னால் அது வாயு மூலை தான். மனிதனுக்கு எப்படி ஒரு மூலை போல இருக்கிறதோ? அதுபோல ஆக வாய் மூலையில் இருக்கிற குற்றம் குறைகள் ஒருவரின் வாழ்க்கை பாதையை அடியோடு மாற்றி வைத்து விடுகின்றது.ஆக ஒரு குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்தல், வெளிநாடுகளில் தங்கியிருத்தல், பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் இருப்பது, மற்றவரிடம் குழந்தை வளர்ப்பது,இது எல்லாம் வாயு மூலை சம்மந்தப்பட்ட வாஸ்து விசயம். இந்த நிகழ்வுகள் செட்டிநாடு மக்களிடம் அதிகமாக இருக்கும். அதே போல பிராமண மக்களிடமும் அதிகமாக இருக்கும்.வடநாட்டு மார்வாடி மக்களிடம் மற்றும் ஜெயின் மக்களிடமும் இருக்கும். அதேபோல ஒருவர் குழந்தை பிறப்பு இல்லையே குழந்தை பிறக்க வேண்டும் என்று ஏங்க கூடிய மனிதர்களின் நிலையிலும் வாயுமூலை தொடர்பு காரணம். அதேபோல திரைகடல் ஓடி திரவியம் தேடு என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் திரை கடலோடி திரவியத்தை தேட போனேன். ஆனால் சேர்த்த செல்வம் சிதறிவிட்டது என்று சொல்லுகிற மக்கள் வாய்மூலையின் குற்றங்களோடு இருப்பவர்கள் தான். எப்படி காற்றை கட்டுப்படுத்த முடியாதோ? அதுபோல வாயு மூலையில் இருக்கும் தவறுகளை நாம் திருத்த நினைத்தால் திருத்த முடியாது. அதை ஒரு வாஸ்து மனிதரை வைத்து தான் திருத்த வேண்டும். எனக்கும் வாயு மூலை தவறு இருந்தால் நான் வாஸ்து நிபுணராக இருந்தாலும் அடுத்த ஒரு மனிதர் வைத்துதான் மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல பொருள் வேண்டாம் அருள் வேண்டும் என்று பயணப்படுகிற மக்கள் இருப்பார்கள். எனது மகள் ஆன்மீக வாழ்க்கைக்கு சென்று விட்டாள். ஒரு குருகுலத்தில் சேர்ந்துவிட்டாள். வீட்டுக்கு வர மறுக்கிறார்கள் என்று சொல்கிற இடத்தில் வாயு மூலை தவறிருக்கும். அதை சரி செய்கின்ற பொழுது அவர்களை மனதளவில் மாற்றம் ஏற்பட்டு உங்களோடு சேர்ந்து விடுவார்கள். ஆக வாயுமூலையை மாற்றுங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். Vastu Consultant Chennai Tips Today,Vastu consultants in Chennai can help with design,Top Vastu Shastra Consultants in Chennai,blog – No.1 vastu consultant in chennai


மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!