ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 27.1.2025 குரோதி வருடம் தை மாதம் 14ந் தேதி. திங்கட்கிழமை. இரவு 8.36 மணி வரை திரயோதசி திதி பிறகு தே.சதுர்த்தசி திதி.காலை 8.48மணி வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம். காலை 8.48 மணி வரை யோகநாள். பிரதோஷ நாள்.
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
Vastu_For_HomeChennai
Justanyvastuconsultant
vastu tips today
dailycalendartamil
Vastu_consultant_near_me
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
தமிழ்காலண்டர்வாஸ்து
Tamil_Vastu_calendar.
சென்னை_வாஸ்து
ChennaiVaastu
vastushastram
Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
ChennaiVastu
Vastu without remedy
Raviramanavastu
Arukkani #Jagannathan_Vastu
CoimbatoreVastu
HosurVastu
Tirupur_Vastu
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice for Home Buyers and New Home Builders:
பூர்விக சொத்துகள் வாஸ்து
வாஸ்து சார்ந்த விசயத்தில் பாதிக்கப்பட்ட சூல்நிலை ஒருவருக்கு தெரியாமல் பழைய சொத்துகளில் அதிகம் ஒருவர் பாதிக்கப்படுகிறார் எனில், இந்த பூர்விக சொத்துகளினால் வரும் பிரச்சனைகளில் தான் எனத் தெளிவாக சொல்லி வட முடியும்.. புதிதாக கட்டும் வீடு ஒரு வாஸ்து நிபுணரை வைத்து நன்றாக கட்டி விடுவார்கள். ஆனால் பழைய பூர்வீக வீட்டை அந்த பூர்வீக சொத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் அந்த சொத்து இவர்களை இயக்கிக்கொண்டு இருக்கும்.பூர்விக சொத்தில் வாஸ்து பிரச்சனைகள் இருந்தால் சரிசெய்ய வேண்டும்.
சொத்து வீடு என்றால் சொத்து அவ்வளவு தான்! உண்மையில் பூர்விக வீட்டு சொத்து, சுயசம்பாத்திய வீட்டு சொத்து என்றெல்லாம் கிடையாது.என்று ஒருசிலர் சொன்னாலும் வாஸ்து சாஸ்திர சட்டத்துக்கு அந்த முடிவு இல்லை. ஆனால், வாஸ்து வகையில் பூர்விக வீட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. அதில் மாற்றுக் கருத்து கிடையாது.
ஒருவர் சுயமாக சம்பாதித்த வீடு ஒன்றை வைத்துள்ளார். அவர் இறந்த அடுத்த விநாடி, அவர்களின் வாரிசுகளுக்கு அது பூர்விக வீடுகள் எனப் பெயர் பெற்று விடும். அவ்வளவு தான்!
ஆக, இன்றைக்கு பூர்விக வீடு சார்ந்த சொத்துகள் அனைத்தும் முன்பு தனிப்பட்ட முறையில் ஒருவர் வாங்கிய சொத்துகளாகத் தான் இருந்திருக்கும்.
பூர்விக சொத்துகளில் தான் எத்தனை எத்தனை கேள்விகள் நமக்கு வருகின்றன..
‘‘எனது தாத்தா சம்பாதித்த சொத்தை எனது தந்தை விற்று விட்டார். அதை மீட்க முடியாமா? என்று என்னை கேட்பார்கள். ஆனால் எனது பதில் என்பது பழைய கதையை திருப்ப வேண்டாம் என்பேன். பூர்விக எனது தாத்தா சொத்தை எனது சித்தப்பா அபகரித்து விட்டார் என்ன செய்வது? எனது பூர்விக சொத்தை எனது தகப்பனார் தனது மகளுக்கும் மட்டும் உயில் எழுதி விட்டார். என்ன செய்வது?. பூர்விக சொத்தில் இரண்டாவது எங்கள் அப்பாவிற்கு இரண்டு திருமணம். ஆக எனது சித்திக்கு பங்கு உண்டா?’’ இப்படிப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் எனது பதில் வேண்டா விட்டு விடுங்கள் என்பேன். ஆக பூர்விக வீட்டைப் பற்றியான வாஸ்து புரிதல்களை வாஸ்து ரீதியாக தெரிந்து கொண்டு அணுக வேண்டும்.
பூர்வீக வீட்டில் அண்ணன் தம்பி பாகப்பிரிவினையின் போது ஒரு சகோதரர் மட்டும் சம்மதிக்கவில்லையா என்ன செய்வது? என்றால் அவர் என்ன சொல்கிறாரோ அவர் சொல்வது என்னவோ, அதன் படி விட்டு கொடுத்து முடிவு எடுங்கள். இல்லை என்றால் பூர்வீக வீட்டின் வாஸ்து தவறுகள் உங்களுக்கு நிச்சயம் பாதிப்பு கொடுக்கும்.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995