Ventilation according to Vastu
வாஸ்து வகையில் எந்த ஒரு அறையாக இருந்தாலும் அதில் என்பது 20% மேலாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து சார்ந்த விஷயத்தை உள்ளே வருகிற அமைப்பாக இருக்கும். மொத்த வீட்டையும் நீங்கள் ஒரு அறையாக பாவிக்க வேண்டும். அப்படி பாவிக்கின்ற பொழுது மொத்த வீட்டிற்கும் ஒரு 20 சதவீதம் திறப்புக்களாக இருக்க வேண்டும். மொத்தசுவரை அதாவது கிழக்கு சுவரையும் வடக்கு சுவரையும், மேற்கு சுவரையும், தெற்கு சுவரையும் கணக்கில் எடுத்து எத்தனை சதுர அடிகள் வருகிறது என்று கணக்கு போட்டு அதில் 20 சதவீதத்திற்கு மேல் திறப்புக்கள் இருக்க வேண்டும். அதில் வாசலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அப்பொழுதுதான் வாஸ்து சார்ந்த விஷயத்தில் மிகுந்த ஒரு யோகத்தை கொடுக்கிற அமைப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக கிழக்கு புறத்தில் உயரத்தில் பத்து அடி சுவர்கள் இருக்கிறது என்று சொன்னால், நீளத்திற்கு 30 அடிகள் இருக்கின்றது என்று சொன்னால் மொத்தத்தில் 300 சதுர அடிகள் கணக்கில் வருகிறது. அதில் 60 சதுர அடிகள் திறப்புகளாக இருக்க வேண்டும். அதாவது 4×4 ஒரு ஜன்னல் இருக்கிறது என்று சொன்னால் 16 சதுர அடிகள் வருகிறது. 7×3 என்று வாசல் இருக்கும் என்று சொன்னால் 21 சதுரடிகள் வருகிறது. கண்டிப்பாக ஒரு கதவு அல்லது இரண்டு மூன்று ஜன்னல்கள் இல்லாமல் ஒரு திசையில் திறப்புக்கள் இருக்கக்கூடாது. பிரதானமாக வடக்கும் கிழக்கும் அதிக திறப்புகளும் , தெற்கு சுவரிலும், மேற்கு சுவரிலும் குறைந்த அளவில் திறப்புகளும் இருக்கும் பொழுது வாஸ்து வகையில் யோகத்தை செய்யும்.
In terms of Vastu, any room should have more than 20% ventilation. Only then will the Vastu-related matter come into play. You should treat the entire house as one room. When using it like that, there should be 20 percent openings in the entire house. Calculate how many square feet there are in the entire wall, that is, the east wall, the north wall, the west wall, and the south wall, and calculate how many square feet there are, and there should be more than 20 percent openings in it. You can also take the door into account. Only then will it be a system that gives great yoga in terms of Vastu. For example, if we say that there are walls ten feet high on the east side and 30 feet long, the total is 300 square feet. Of that, 60 square feet should be openings. That is, if we say that there is a 4×4 window, it comes to 16 square feet. If we say that there is a 7×3 door, it comes to 21 square feet. There should be no openings in any direction except for one door or two or three windows. It is important to note that there should be more openings in the north and east, and fewer openings in the south and west walls. This will create yoga in terms of vastu.
Ventilation according to Vastu,Which direction is best for ventilation?,Which direction should air flow be according to Vastu?,Which direction is air in Vastu?,Which direction to put AC as per Vastu?,வாஸ்து வகையில் வென்டிலேஷன்,