Southwest corner which is called as Kubera corner
கணவன் மனைவி உறவை உயர்த்துகின்ற குபேர மூலை என்று சொல்லுகிற தென்மேற்கு மூலையில் வாஸ்து என்று பார்க்கும் பொழுது நிலத்தின் இடமாக தென்மேற்கு மூலை இருக்கின்றது. நிலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிற விஷயம் தென்மேற்கு . அந்த இடத்தில் எப்பொழுதுமே நீரின் கூறுகள் ஈரத்தன்மை எப்பொழுதுமே இருக்கக்கூடாது . அதேபோல அந்த மூலையில் திறந்த அமைப்போ வாசல்களோ கதவுகளோ இருக்கக்கூடாது.அதேபோல் காலியிடங்களாக அந்த இடம் இருக்கக் கூடாது . ஆக இந்த இடத்தில் தென்மேற்கு மூலை என்பது எப்பொழுதுமே உயரமாக இருக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் வர வேண்டிய நிகழ்வுகள் வாஸ்து வகையில் என்று பார்க்கும் பொழுது குடும்பத் தலைவன் தலைவியின் படுக்கையறை இருக்கலாம். அதேபோல மேல்நிலை தண்ணீர் தொட்டி தாராளமாக இருக்கலாம். பொருள்களை சேமிக்கின்ற அறைகள் இருக்கலாம். அதாவது ஸ்டோர் ரூம் என்று சொல்லுகிற அமைப்பு இருக்கலாம். பணப்பெட்டி வைக்கிற அறையில் இருக்கலாம். அதே போல தென்மேற்கு மூலையில் வரக்கூடாத நிகழ்வுகள் என்று பார்க்கும் பொழுது சமையல் அறை அங்கு இருக்கக்கூடாது. பூஜை அறை அங்கே இருக்க கூடாது. பள்ளங்கள் கிணறு ஆழ்துளை கிணறுகள் அங்கு இருக்கக்கூடாது. குளியலறை கழிவறை அங்கு இருக்கக்கூடாது.அதேசமயம் தென்மேற்கு சாலை இருந்தால் தென் மேற்கு படிக்கட்டுகள் கொண்டு வந்தால் யோகத்தை செய்யும் .அதாவது மூலை படிக்கட்டு அமைப்பாக மாற்றி அமைக்கின்ற பொழுது தாரளமாக யோகத்தை கொடுக்கும். அதனை தெற்கு பார்த்த மேற்கு பார்த்த வீடுகளுக்கு பொறுத்தி வைத்துக் கொள்ளலாம். கிழக்கு பார்த்த வடக்கு பார்த்த வீடுகளுக்கு இந்த அமைப்பை பொருத்தக் கூடாது. அதேபோல வெளிமூலை படிக்கட்டுகள் என்று வரும் பொழுது தூண்கள் அமைத்தது போல வரக்கூடாது. அப்படி வருகிறது என்று சொன்னால் அதற்கு இணையான இடங்கள் தெற்கில் அமைத்தால் வடக்கில் காலியிடங்களும், மேற்கில் அமைத்தால் கிழக்கில் காலியிடங்களும் இருக்க வேண்டும்.அதேபோல் போர்டிகோ அமைப்பு என்பது 100% அந்த இடத்தில் வரக்கூடாது. இன்வெர்ட்டர் EB பாக்ஸ் ஜெனரேட்டர் போன்ற விஷயங்கள் எக்காரணம் கொண்டும் தென்மேற்கு பகுதியில் வரக்கூடாது.
Southwest corner which is called as Kubera corner which enhances the relationship of husband and wife, South West corner is the place of land when looking at Vastu. The point of comparison with the land is South-West. There should always be elements of water and moisture in that place. Similarly, there should not be any open structure, doorways or doors in that corner. Likewise, the place should not be vacant. So the south-west corner in this place should always be high. The southwest corner may be the bedroom of the head of the family when the events to come are seen in Vastu terms. Also overhead water tank can be generous. There may be storage rooms. That means there may be a structure called a store room. May be in the room where the money box is kept. Similarly, the kitchen room should not be located in the south-west corner when it is seen as events that should not happen. The puja room should not be there. Pits bore wells should not be there. The bathroom and toilet should not be there. Whereas if there is a south-west road, bringing the stairs to the south-west will do Yoga. It can be applied to south-facing and west-facing houses. This system should not be fitted for east facing north facing houses. Similarly, when it comes to outer corner stairs, it should not come as if it is built with pillars. If it is said that it is coming, then there should be vacancies in the north if it is placed in the south, and if it is placed in the west, there should be vacancies in the east. Similarly, the portico structure should not come 100% in that place. Things like inverter EB box generator should not come in south west region for any reason. Southwest corner which is called as Kubera corner ,Southwest corner which is called as Kubera corner ,Which corner is Kubera Corner?,What is the south west Corner called?,Which side is known as Kubera Moola?,What is the south east corner of wealth?,