The floor plan of the house is Vastu
வாஸ்து ரீதியாக வீட்டின் தரை தள அமைப்பு அதாவது, ஃப்ளோரிங் வாஸ்து என்று சொல்லக்கூடிய ஒரு சில கருத்துக்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வீட்டை எவ்வளவு அழகாக நீங்கள் கட்டினாலும் வீட்டிற்கு உள்ளே அமைக்கிற தரைத்தளம் என்பது வாஸ்து வகையில் சரியாக இருக்க வேண்டும். வெயில் குளிர்கால சூழ்நிலைகளில் வெடிப்புகள் இல்லாமல் இருப்பது நல்லது. அதே சமயம் நடந்தால் ஒளி ஏற்படுத்தக் கூடாது. சுத்தம் செய்ய, கழுவ துடைக்க எளிதாக இருக்க வேண்டும். வீட்டின் தரைத்தளம் என்பது வாசலை விட உயரமாக இருக்க வேண்டும். அதே சமயம் தெற்கு பார்த்த மேற்கு பார்த்த வாசலை விட தரைத்தளம் பெரிய அளவிற்கு உயரத்தில் இருக்கக் கூடாது. அதேபோல கழிவறை தரைத்தளம் என்பது வீட்டின் உயரத்திற்கு இணையாக இருக்க வேண்டும். ஒருவேளை உயரமாக அமைக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், தென்மேற்கு உயரம் தென்கிழக்கு அதைவிட தாழ்ந்தும், வடமேற்கு அதைவிட தாழ்த்தும், வடகிழக்கு அதைவிட தாழ்ந்தபடி அமைக்கலாம். அப்படி அமைக்கின்ற பொழுது அனைத்து அறைகளுக்கும் துண்டாக அமைப்பில் நிலவுகளை பொறுத்திக் கொள்வது சரியானது. இல்லை என்று சொன்னால் தரைத்தளம் என்பது ஏகத்திற்கும் ஒரே மாதிரி அமைப்பாக தான் வரும். ஏனென்று சொன்னால் இன்றைய நவீன காலத்தில் டைல்ஸ் என்ற விஷயத்தை நாம் பொறுத்துகின்ற காரணத்தால் இயற்கை இறக்கமாக பொருத்த முடியாது . Vastu Shastra home design and plans PDF,Vastu house plan north facing,Free online Vastu home Plans,House Plan as per Vastu, South facing,