கிரகப்பிரவேச பூஜை நிகழ்வு வாஸ்து Gruhapravesam Pooja event vastu

கிரகப்பிரவேச பூஜை நிகழ்வு வாஸ்து Gruhapravesam Pooja event vastu

கிரகப்பிரவேச பூஜை நிகழ்வு வாஸ்து வகையில் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவு வழியே தெரிந்து கொள்வோம். புது இல்லத்தில் தென்மேற்கு அறையிலோ அல்லது, தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த மத்திய பகுதிகளிலும் தாராளமாக செய்யலாம். கோம குண்டத்தை அமைத்து பிறகு பிரவேசம் செய்யலாம் அல்லது, பிரதானமாக வடகிழக்கு வடக்கு சார்ந்த கிழக்கு சார்ந்த அல்லது வடகிழக்கு சார்ந்த பகுதியில் இல்லத்தில் மத்திய பாகத்தில் அந்த பூஜையை ஹோமகொண்டம் வளர்ந்து கிரகப்பிரவேசம் நிகழ்வு பூஜையை செய்யலாம். ஒரு இடத்தில் பூஜை செய்வது என்பது சரியான நேரத்தில் சரியான கிழமையில் செய்ய வேண்டும். ஆகவே கிரகப்பிரவேசத்திற்கு ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும், புதன்கிழமையும், வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சாலச் சிறந்தது. மற்ற நாட்களை தவிர்த்து கொள்ள வேண்டும். பூஜை நேரம் என்பது காலை 5 மணியிலிருந்து காலை 8 மணிக்கு உள்ளாக முடித்துக் கொள்வது சாலச்சிறந்தது. பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் இவைகளை பூஜை நிகழ்வு முடிந்த பிறகு குடும்ப உறுப்பினர்கள், கட்டிடம் கட்ட உதவிய மக்கள் அனைவருக்கும் திருஷ்டி சுற்றி மூன்று காய்களையும் வீட்டு முன் அல்லது சாலை சந்திக்கும் இடங்களில் உடைத்து திருஷ்டியை  கழித்து விட வேண்டும். கிரகப்பிரவேசம் முடிந்த பின்பு சுற்றார் மற்றும் வேலை செய்த உதவியாளர்களுக்கு தாம்பூலத்தட்டில் வெற்றிப் பாக்கு தேங்காய் பழம் புத்தாடை பணம் கொடுத்து உதவ வேண்டும். அதன்பிறகு விருந்தாளிகளுக்கு நல்ல உபச்சாரம் செய்து உணவளித்து உபசரிக்க வேண்டும். ஏழ்மையில் இருக்கிற மக்களுக்கும், வேலை செய்ய முடியாதவர்களுக்கு தானங்கள் செய்யலாம். ஆக கிரகப்பிரவேசம் நிகழ்வுக்கு உற்றார் உறவினர்களுக்கும் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் மரியாதை கொடுத்து துணிமணிகளை கொடுத்து ஒரு வரவேற்பு கொடுத்து கிரகப்பிரவேச பூஜைகள் செய்வது சாலச்சிறந்தது. கிரகப்பிரவேசம் அன்று பெரிய அளவில் வெகுமதிகளை ஒருவரிடம் வாங்க வேண்டாம் என்பதும் ஒரு சரியான முறை என்று சொல்வேன்.

Through this post, let’s know how to perform Grahapravesa Pooja event in Vastu style.  It can be liberally done in south-west room or south-west facing central areas in new house.  Goma kundam can be set up and then enter or do that pooja in the central part of the house in the main part of the house mainly north-east north facing east or north-east facing and do the pooja with homakondam and do the Grahapravesam event pooja.  Pooja at a place should be done at the right time on the right day.  So Sunday, Monday, Wednesday, Thursday and Friday are best for planet entry.  Other days should be avoided.  Pooja time is preferably between 5 AM and 8 AM.  After the Pooja event, all the family members, people who helped in the construction of the building should break the three pieces of pumpkin, coconut and lemon around the Drishti in front of the house or at the intersection of the roads and spend the Drishti.  After completion of Grahapravesam, helpers who have traveled around and worked should be helped by giving money to the helpers who have worked in Tambulathat.  After that, the guests should be treated well and fed.  Donations can be made to poor people and those who cannot work.  Therefore, it is best to perform Grahakpravesha Pujas for the Grahakpravesam event by paying respect to relatives and brothers and sisters and giving them clothes and giving them a welcome.  I would also say that it is a good practice not to buy large rewards from someone on Grahapravesam. Gruhapravesam Pooja event vastu, கிரகப்பிரவேச பூஜை நிகழ்வு வாஸ்து ,கிரகப்பிரவேசம் செய்ய உகந்த காலம்,Gruhapravesam Puja,House Warming Ceremony, Gruha Pravesh Decoration,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!