ஆயாதி குழி கணக்கு அளவு முறை வாஸ்து

ஆயாதி குழி கணக்கு

குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும். மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும்.

வயது எண்  45 க்கு மேல் வருவது தான் சிறப்பு. வயது எண் கூட கூட அதிகமாக நல்ல அளவு ஆகும்.

6. இராசி பலன் : மொத்த குழியை  4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் எண் இராசி எண் ஆகும் 

சிறப்பான எண்கள் – 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12.

7. ஜாதிபலன்கள் :-  மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, வந்த தொகையை 4 ல் வகுக்க மீதி வருவது ஜாதி எண் ஆகும் 

சிறப்பான எண்கள் – 1, 2, 3.

8. அங்குச பலன்கள் :-  குழியை 4 ல் பெருக்கி வந்த தொகையை 9 ல் வகுக்க வரும் விடையே அங்குசம் அளவு எண் ஆகும்.

சிறப்பான எண்கள் – 2, 3, 4, 5, 6, 8, 9.

9. நட்சத்திர அளவு பலன் :-மொத்தக்  குழியினை 8 ல் பெருக்கி, வருகின்ற தொகையை 27 ல் வகுத்தால் மீதி வரும் எண் நட்சத்திரம் ஆகும் .

சிறப்பான எண் – 1, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 17, 21, 22, 24, 26.

10. திதி முறை பலன்கள் :- மொத்தக் குழியினை 9 ல் பெருக்க , அப்படி பெருக்கி வந்த விடையை 30 ஆல் வகுக்க மீதி வரும் எண் திதி எண் ஆகும் 

சிறப்பான எண்கள் – 1, 2, 3, 5, 6, 7, 10, 12, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 25, 27, 28, 30

11.  வாரத்தில் பலன்கள் :-மொத்த குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 7 ல் வகுக்க  வரும் விடையே நாள் கணக்கு எண் ஆகும்.

சிறப்பான எண்கள் – 2, 4, 5, 6.
*******************************

மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு வரியோ அல்லது இரண்டு வரியோ செங்கல் வைத்து திட்டு கட்டி அந்த அடியை சரி செய்து கொள்ள வேண்டும். இவைகளை தமிழர்கள் முறையாக இருந்தது. இதனை கவனிக்க வேண்டுமா என்றால் என்னை பொறுத்தவரை வாஸ்து தான் முக்கியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!