ஒரு வீட்டில் முதல் குழந்தை ஆணா?பெண்ணா? வாஸ்து

ஒரு இல்லத்தில் அக்காள் தங்கை தம்பி அண்ணன் போன்ற உறவுகளோடு பிறந்திருப்பார்கள். அப்படி பிறக்கின்ற பொழுது ஒரு இல்லத்தில் அனைத்து கர்மாவையும் எடுத்துக் கொள்கிற ஒரு மனிதனாக ஒரு குழந்தையாக ஒரு இல்லத்தில் முதல் குழந்தை இருக்கின்றது. அப்படிப்பட்ட அந்த முதல் குழந்தை அது பெண்ணாக இருந்தாலும் சரி , ஆணாக இருந்தாலும் சரி பாதிப்பு பாதிப்பு தான். பையனாக இருக்கும் பொழுது தந்தையோடு பிரிந்து இருக்கும்போது ஒரு நல்ல பலனை எடுக்கிற நிகழ்வாக எடுக்கும் அதேசமயம் தந்தையோடு இணைந்து இருக்கும் பொழுது எதிர்மறை பலன்களை எடுக்கிற விஷயமாக இருக்கும். முதல் குழந்தை பெண்ணாக இருந்து தம்பி பிறந்து இருந்தால் அக்காவின் சிரமமான வாழ்க்கையில் தான் தம்பி நன்றாக வாழ்வார்கள். இந்த இடத்தில் அக்காவின் கணவர் நன்றாக வாழும் பொழுது தம்பி நன்றாக வாழ மாட்டார்கள். அக்காவின் மகன் நன்றாக வாழும் பொழுது தம்பி நன்றாக வாழ மாட்டார்கள். ஒரு அண்ணன் நல்ல வாழ்க்கை வாழும் பொழுது தங்கை நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்கள். ஒரு தங்கை நல்ல வாழ்க்கை வாழும் பொழுது அண்ணன் நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்கள். நல்ல வாழ்க்கை என்பது பணத்தில் உறவில் பொருளாதாரத்தில் இப்படி நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லோருமே வளர வேண்டும் வாழ வேண்டும் என்று சொன்னால் அக்காவின் வீடாக இருந்தாலும் சரி, தம்பியின் வீடாக இருந்தாலும் சரி, அண்ணனின் ஈடாக இருந்தாலும் சரி, தங்கையின் வீடாக இருந்தாலும் சரி, வாஸ்து விதிகளுக்கு உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே அனைவரும் நலமுடன் நலமாக வளமாக வாழ்வார்கள். இது எனது பயணத்தில் நான் உணர்ந்த விசயம். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். எடைக்கு எடை வைத்து சரி செய்து கொள்ளலாம் என்பது தவறு எடையை எடுத்தால் தான் சரி என்பது ஆகும். எடுத்துக்காட்டாக தென்கிழக்கில் ஒரு படிக்கு கூண்டு கட்டி இருக்கிறோம் அந்த படியில் கூண்டு உயரமாக இல்லை அதற்காக தென்மேற்கில் ஒரு கூண்டு கேட்கலாம் கட்டிக் கொள்ளலாமா? அல்லது ஒரு அறை கட்டிக் கொள்ளலாமா? என்று முடிவு செய்யக்கூடாது. படியில் கூண்டு தவறாக இருந்தால் அதை அப்புறப்படுத்துகிற வேலையைத்தான் செய்ய வேண்டும். இதற்கு எடை என்று பொருத்திப் பார்க்கக் கூடாது. எடையை வைக்கக் கூடாது. அதே சமயம் எடுக்க வேண்டும் அதுதான் வாஸ்து முறையில் சரி.

ஒரு வீட்டில் முதல் குழந்தை ஆணா?பெண்ணா? வாஸ்து

They are born in a house with relations like younger sister and brother.  At such birth, the first child in a house is a human being who takes all the karma in a house.  That first child, whether it is a girl or a boy, is affected.  When a boy is separated from his father, it is considered to be a good event, whereas when he is with his father, it is an event that brings negative results.  If the first child is a girl and the younger brother is born, the younger brother will live well in the difficult life of the older sister.  While sister’s husband lives well in this place, brother does not live well.  When sister’s son lives well, brother does not live well.  A brother lives a good life while a younger sister does not live a good life.  When a younger sister lives a good life, the elder brother does not live a good life.  A good life means money, relationships, economics, and so on.  If they all want to grow up and live, whether it is their sister’s house, their brother’s house, their brother’s house, or their sister’s house, only if they bring it within the rules of Vastu, everyone will live healthy and prosperous.  This is something I realized in my journey.  I would like to say one thing at this point.  It can be corrected by weight for weight.  For example, we have built a cage for a step in the southeast. The cage is not high enough for that step. For that, we can ask for a cage in the southwest. Can we build it?  Or build a room?  Don’t decide that.  If the cage is wrong in the step, the work of disposing of it should be done.  It should not be considered a weight.  Do not put weight on.  It should be taken at the same time and that is correct in Vastu system.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!