Termite place Vastu
பாம்பு புற்று வாஸ்து:
ஒரு சில இடங்களில் கரையான் புற்றுக்கள் பல்கி பெருகி மேலே எழும்புகிற ஒரு நிகழ்வுதான் பாம்பு புற்று என்று சொல்வோம் அந்த பாம்பு புற்றுக்கள் ஒரு இடத்தில் இருக்கலாமா? என்று சொன்னால் 100% இருக்கக்கூடாது என்று தான் சொல்லுவேன். பாம்பு புற்றுக்கள் என்று சொல்வதை கரையான் புற்று என்று தான் சொல்ல வேண்டும். பாம்பு புற்றுகள் எப்படி அங்கே இருக்கிறது என்று சொன்னால் பாம்புகளுக்கு தனி இருப்பிடம் என்பது கிடையாது. எங்கே சந்துகள் இருந்து கொண்டிருக்கிறதோ அங்கே சென்று அமர்ந்து விடும். அப்படி இருக்கின்ற போது அந்த புற்றில் கரையான் பூச்சிகள் பல்கி பெருகி பெரிய அளவில் வளர்கின்ற இடத்தில் அந்த சந்துகளை பாம்புகள் சென்று அடங்கி அமர்ந்துவிடும் அதனை தன்னுடைய இருப்பிடமாக மாற்றிவிடும். அங்கே இருக்கிற கரையான்களை உணவாக எடுத்துக் கொண்டு அங்கே இருந்து விடும். ஆக இந்த இடத்தில் அப்படிப்பட்ட அந்த பாம்பு புற்றுக்களை நாம் அப்புறப்படுத்துகிற நிகழ்வு என்பது மிக மிக முக்கியம். பாம்பு இருந்தாலும் கூட பாம்பு அங்கு இருக்கின்ற காரணத்தால் அதை அப்புறப்படுத்தும் என்பது ஒரு தோசமாக மாறிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் ஒரு கரையான்புற்று அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னால் முதலில் அந்த புற்று அமைந்த பகுதியை சுற்றி இனிப்பு கலந்த பால் ஊற்றி வைக்கலாம். பிறகு மறுநாள் உடைத்த பச்சரிசி நாட்டுச்சக்கரை போன்றவற்றை புற்றைச் சுற்றி தெளித்து விடலாம். ஒரு சில நாட்கள் கழித்து பாம்பு பிடிக்கிற மனிதரை வரவழைத்து அதில் பாம்பு இருக்கிறதா என்று சரி பார்க்கலாம். அதற்குப் பிறகு பாம்பு இருந்தால் பாம்பை பிடித்து வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் அந்த கரையான் புற்று அடியோடு முழுவதுமாக எடுத்து கட்டிடத்தை அமைத்துக் கொள்ளலாம் இதனால் இந்த இடத்தில் எந்த விதமான தோஷங்களும் அந்த இடத்தில் இருந்து வராது முக்கியமாக அங்கே பாம்புகள் இருந்தால் அதனை எக்காரணம் கொண்டும் அடித்து விடக்கூடாது. அதை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துவது சாலச் சிறந்தது . ஆக பாம்பு புற்றுகளுக்கும் வாஸ்துவிற்கும் இந்த சம்பந்தமும் கிடையாது.
A case where termite tumors multiply and rise up in a few places is called snake cancer. Can those snake tumors be in one place? If I say that, I will say that it should not be 100%. What is called snake cancer should be called termite cancer. Snakes do not have their own habitat when it comes to how snakes are there. It goes and sits where there are alleys. When that is the case, where the termites multiply and grow in large numbers, the snakes go and sit in those alleys and make it their home. It takes the termites there as food and stays there. So it is very important that we dispose of such snakes in this place. Even if there is a snake, it becomes a dosha to dispose of the snake because it is there. If you want to get rid of a termite tumor in such a place, you can first pour sweetened milk around the area where the tumor is located. Then, the next day, you can sprinkle broken tamarind paste around the tumor. After a few days, a snake catcher can be called to check if there is a snake in it. After that, if there is a snake, catch the snake and dispose of it in other places and leave the termite in that place and build a building so that no evil will come from that place. Mainly, if there are snakes there, it should not be beaten for any reason. Better to dispose of it elsewhere. So there is no relation between snake cancer and Vastu.
chennai vastu,பாம்பு புற்று வாஸ்து, Termite place Vastu,கரையான்கள் வாஸ்து,வீட்டில் பாம்பு புற்று இருந்தால் என்ன செய்வது ,Are termites good luck?,Is termite in house good or bad?,What are the bad side of termites?,What is the living place of termite?,Spiritual meaning of termites in your house,Astrological effects of termite,Termites Feng Shui,Termite superstitions India,Flying termites superstition,Spiritual meaning of termites in your house in hinduism,Termites in house signs,Termites in house Vastu,