வாஸ்து வகையில் சுற்றுப்புற சூழ்நிலைகள்
மிக மிக முக்கியம். எப்படி வடக்கு கிழக்கும் பள்ளங்களாக இருக்க வேண்டும், தெற்கு மேற்கு உயரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோமோ, இந்த விதிகள் மிக மிக முக்கியம். வடக்கில் ஒரு சாலை இருக்கிறது அந்த சாலையின் மட்டத்திற்காக வீட்டை நாம் அமைத்திருப்போம். தெற்கு புறத்தில் தோட்டமாக இருக்கலாம் அல்லது வீடு கட்டாமல் காலி இடமாக இருக்கலாம். அப்படி இருக்கின்ற இடத்தில் அந்த இடத்தின் லெவல் என்று சொல்லக்கூடிய மட்டம் என்பது பள்ளமாக இருக்கும். அப்படி பள்ளமாக இருக்கக்கூடிய இடத்தில், தெற்கு பள்ளமாகவும் வடக்கு உயரமாகவும் வேலையை செய்து கொண்டிருக்கும். இந்த இடத்தில் வீட்டிற்கு உள்ளாக வாஸ்து விதிகளை நான் புகுத்தி விட்டேன் மிகுந்த யோகத்தைச் செய்கிற வீடாக இது இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், வேறு வகையில் தவறுகளை செய்கிற நிகழ்வாக அந்த இடத்தில் இருக்கும் . இதை கவனத்தில் கொண்டு ஒரு இடத்தை மாற்றி அமைக்கும் போது தான் வாஸ்து வகையில் மாற்றம் என்பது நடக்கும். அப்படி இல்லாத போது வாஸ்து என்பது பொய்யாக கூட இருக்கும் என்கிற சந்தேகம் ஒரு மனிதருக்கு ஏற்படும். ஆக ஒவ்வொரு இடத்திலும் சுற்றுப்புற சூழ்நிலைகளை கவனித்து பார்த்து வைக்க வேண்டும். வாஸ்து வகையில் சுற்றுப்புற சூழ்நிலைகள்,சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடு – வகைகள் ,சுற்றியுள்ள வாஸ்து என்றால் என்ன,Surroundings in Vastu, chennai vastu