ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால், சில இடங்களில் புத்திசாலித்தனமாக அதி மேதாவியாக இருக்கிற மக்கள் என்று நினைத்துக் கொண்டு ஒரு இல்லம் ஈசானம் பார்க்க வேண்டும் அதாவது வடகிழக்கு நோக்கியபடி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து மனையை திருப்பி கட்டிவிடுவார்கள். அப்படி கட்டுவதில் 100% தவறு கிடையாது. ஆனால் சுற்றிலும் இடம் விடுகிற பொழுது ஈசானியம் அதிகமாகவும், அதைவிட கொஞ்சம் வாயு குறைவாகவும், அதைவிட கொஞ்சம் அக்னி குறைவாகவும், அதனை விட கொஞ்சம் நைருதி குறைவாகவும் இருக்க வேண்டும். இப்படி இல்லாமல் வடகிழக்கு பார்த்து ஒரு வீடு கட்டுகிற பொழுது வாஸ்து வகையில் தவறு நடந்து விடும். இதுபோல திசை திரும்பி இடங்களிலும் இந்த நிகழ்வு என்பது வந்துவிடும். இதை கவனத்தில் கொண்டு ஒரு இல்லத்தை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து வகையில் யோகத்தைச் செய்கிற நிகழ்வாக இருக்கும். ஆக ஒரு வாஸ்து நிபுணராக இருந்தாலும் சரி , ஒரு கட்டடத்தின் உரிமையாளராக இருந்தாலும் சரி, திசை திரும்பிய இடங்களில் சுற்றுச்சுவரை அமைக்கின்ற பொழுது நைருதி பகுதியில் ஒரு எடையை கொடுக்க வேண்டும். அதாவது ஒரு கட்டிடத்தை கொடுக்க வேண்டும். அதே அக்னி பகுதியிலும் ஒரு கட்டிடத்தை கொடுக்க வேண்டும். ஈசானத்தையும் அதாவது வடமேற்கு பகுதியையும் வடகிழக்கு பகுதியையும் எப்பொழுதுமே காலியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை கவனத்தில் கொண்டு திசை திரும்பிய இடங்களில், வீடாக இருந்தாலும் சரி, பொதுவான கட்டிடங்களாக இருந்தாலும் சரி, சரியான முறையில் கட்ட வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்துவின் வகையில் யோகத்தைச் செய்யும்.
If you say there is a house, some people think that there are very intelligent people in some places and decide that a house should face the north, that is, it should face the northeast, and they will build the land in reverse. There is nothing 100% wrong in building like that. But when leaving space around it, there should be more north, a little less gas, a little less fire, and a little less south. Without this, when you build a house facing the northeast, there will be a mistake in terms of vastu. Similarly, this phenomenon will occur in places facing the opposite direction. You should pay attention to this while building a house. Only then will it be an event of doing yoga in terms of vastu. So whether you are a vastu expert or the owner of a building, when you build a perimeter wall in places facing the opposite direction, you should give a weight to the south area. That is, you should give a building. You should also give a building in the same fire area. The north-east and north-west areas should always be kept empty. Keeping this in mind, the areas facing the north-west should be constructed in the right manner, whether it is a house or a public building. Only then will yoga be performed according to Vastu.