வடகிழக்கு ஈசானிய பகுதியில் வாஸ்து குற்றங்கள்

வடகிழக்கு ஈசானிய பகுதியில் வாஸ்து குற்றங்கள்

உடம்புக்கு மிகப் பிரதானமாக இருக்கிற ஒரு விஷயம் மனித உடலின் தலை. ஒருவர் உடலில் கை கால்களை இழக்கலாம். ஏன் சிறுநீரகம் கூட வேறொருவர் கொடுக்கலாம். நுரையீரல் கூட வேறொரு மக்கள் கொடுக்கலாம். கல்லீரல் கூட வேறொருவர் கொடுக்கலாம்.ஆனால் தலையை யாரும் கொடுக்க முடியாது. ஆனால் ஒருவருக்கு தலை என்பது இல்லை என்று சொன்னால் இந்த பூமியில் அவருடைய வாழ்க்கை என்பது இல்லை. அந்த வகையில் என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு இல்லத்தில் சிரசாக இருப்பது வடகிழக்கு பகுதி. எந்த இடத்தில் வேண்டுமானாலும் வாஸ்து குற்றங்கள் இருக்கலாம். ஆனால் வடகிழக்கு ஈசானிய பகுதியில் வாஸ்து குற்றங்கள் என்பது தலை இல்லாத வீட்டில் இருப்பது போல. அதனால் தான் வடகிழக்கை நான் பிரதானப்படுத்தி வாஸ்து சொல்லுகிறேன் என்று சொல்ல முடியும். எந்த இடத்திலும் வடகிழக்கு அடை விடக்கூடாது. அடைக்கக் கூடாது. எடையாக இருக்கக் கூடாது. காற்று வருகிற வழியில்லாமல் இருக்கக்கூடாது. வெளிச்சம் வருகிற வழி இல்லாமல் இருக்க கூடாது. இதை முதலில் பார்த்துக்கொண்டால் வாழ்க்கை என்பது வாஸ்து வகையில் இனிமையாக இருக்கும். எப்படி ஒரு வாகனத்திற்கு சக்கரம் என்பது பிரதானமோ, வாழ்க்கைச் சக்கரம் நன்றாக ஓட ஈசானியத்தை முதன்மைப்படுத்தி வீடு கட்டுங்கள். இந்த இடத்தில் அழகை கொஞ்சம் தூக்கி அப்புறப்படுத்தி விட்டு வாஸ்துவை உள்ளே நுழைத்து வீடு கட்டுங்கள் என்று தான் சொல்லுவேன். மற்றும் ஒரு விஷயத்தை இந்த இடத்தில் சொல்லுகின்றேன். வீடு அழகாக வேண்டும் என்கிற மக்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கூட கிடையாது என்று தான் சொல்லுவேன்.அதாவது வாஸ்து என்பது அழகு படுத்துவது கிடையாது. மனித வாழ்க்கையை ஆளப்பிறந்தவர்களுக்கு கொடுக்கப்படுகிற விஷயம் வாஸ்து.

One of the most important things for the body is the head of the human body. A person can lose his arms and legs. Why, even a kidney can be given by someone else. Even lungs can be given by someone else. Even liver can be given by someone else. But no one can give the head. But if someone does not have a head, then his life on this earth does not exist. In that way, our ancestors have said that the head is the main part of my body. In that way, the head of a house is the northeast. There can be Vastu faults in any place. But Vastu faults in the northeast and east are like being in a house without a head. That is why I can say that I give Vastu by making the northeast the main part. Nowhere should the northeast be allowed to enter. It should not be blocked. It should not be heavy. There should not be a way for air to come in. There should not be a way for light to come in. If you look at this first, life will be pleasant in terms of Vastu. Just as the wheel is the main part of a vehicle, so for the wheel of life to run smoothly, build a house by prioritizing the east. I would say that you should remove the beauty a little and build a house by introducing Vastu. And I would also like to say one thing here. I would like to say that people who want their house to be beautiful do not even need to contact me. In other words, Vastu is not about beautification. Vastu is something that is given to those who are born to rule human life.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!