புகைப் போக்கி வாஸ்து Chimneys kitchen Vastu
Chimneys in the kitchen should be Vastu style. At that time it was a food made without adding much oil. But today no food is prepared without oil. Medicine prescribes how much oil should be added to a person’s diet. That means a man should not add more than 500ml of oil per month. But today no one takes account like that. They use more than that. This is the calculation even including the oil additives. So these days smoke detectors are a must in the kitchen due to the high consumption of oil. In this place it would be naturally better to have cemented chimneys as in the olden days and openings in the upper floor to ventilate naturally. But architecturally it will give error. If you say that you are setting up a private kitchen, you can freely do that thing without being attached to the house. When constructing a kitchen in the south-east part of the house, things like an exhaust fan or a chimney should be kept, and a corner cut structure with brick cement should not be built for any reason. If you say that you are placing the chimney and exhaust pan, then it should be placed on the south wall. It should not be hung on the east wall. Know and implement this architecturally.
சமையலறையில் இருக்கும் புகைப் போக்கிகள் வாஸ்து வகையில் இருக்க வேண்டும். அந்த காலத்தில் எண்ணெய் அதிகம் சேர்க்காது செய்யப்பட்ட உணவாக இருந்தது. ஆனால் இன்று எண்ணெய் இல்லாமல் எந்த உணவுமே செய்யப்படுவதில்லை. ஒரு மனிதனுக்கு உணவு என்பது உணவு எண்ணெய் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்கிற விதியை மருத்துவம் சொல்கிறது. அதாவது ஒரு மனிதன் மாதத்திற்கு 500ml மேலாக எண்ணெய் சேர்க்கக்கூடாது. ஆனால் இன்று அப்படி யாரும் கணக்கு பார்ப்பதில்லை. அதற்கு மேலாக தான் உபயோகிக்கின்றனர். இதில் எண்ணெய் பலகாரங்களை சேர்த்துக் கூட இந்த கணக்கு தான். ஆகவே இன்று எண்ணெய் உபயோகம் அதிக அளவில் இருப்பதால் இன்று சமையலறையில் அந்த புகை போக்கிகள் என்பது கண்டிப்பாக வேண்டும். இந்த இடத்தில் பழைய காலங்கள் போல சிமெண்ட்டாலான புகை போக்கிகளை அமைத்து மேலே மாடியில் திறப்புகளை வைத்து காற்று போகுவது போல் அமைப்பது இயற்கையாக நன்றாக இருக்கும். ஆனால் வாஸ்து ரீதியாக அது தவறை கொடுத்து விடும். நீங்கள் தனிப்பட்ட ஒரு சமையல் அறை அமைக்கிறீர்கள் என்று சொன்னால் வீட்டோடு இணைந்து இல்லாமல் தாராளமாக அந்த விஷயத்தை செய்து கொள்ளலாம். வீட்டோடு இணைந்த தென்கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைக்கும் பொழுது எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது சிமினி போன்ற விஷயங்களை தான் வைத்து கொள்ள வேண்டுமே தவிர, செங்கல் சிமெண்ட் கொண்டு ஒரு மூலை வெட்டுப்பட்ட அமைப்பில் எக்காரணம் கொண்டும் கட்டக்கூடாது. அப்படி சிமினி மற்றும் எக்ஸாஸ்ட் பேன் வைக்கிறீர்கள் என்று சொன்னால் தெற்கு சுவரில் மாட்ட வேண்டும். அதனை கிழக்கு சுவரில் மாட்டக்கூடாது. இதை வாஸ்து ரீதியாக தெரிந்து கொண்டு செயல்படுத்துங்கள். புகைப் போக்கி வாஸ்து, Chimneys kitchen Vastu,சமையலறை வாஸ்து திசை,Which direction should the kitchen sink face?,Which direction is best for hob and chimney?,Vastu for kitchen sink and stove,Kitchen stove direction as per Vastu,Kitchen sink direction as per Vastu,North west kitchen Vastu,South west kitchen Vastu,South East kitchen Vastu,Best location for kitchen in house,North east kitchen Vastu,Which direction is best for cooking in the kitchen?,Which direction to keep the oven?,