வடக்கு திசை வாஸ்து திசைகாட்டி North Direction Vastu Compass

North Direction Vastu Compass

வாஸ்து வகையில் வடக்கு திசையை திசைகாட்டி வழியாக எப்படி தெரிந்து கொள்வது என்கிற கேள்வியை நிறைய மக்கள் இடம் வாங்கும்போது என்னிடம் கேட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் வடக்கு என்று சொன்னாலே திசைகாட்டியில் ஜீரோ அல்லது 360 டிகிரிகள் என்று சொல்லுவோம். அந்த வகையில் வடக்கு சாலை இருக்கிறது, ஒரு இடத்திற்கு வடமேற்கு எல்லையும் ஒரு இடத்திற்கு வடகிழக்கு எல்லையையும் ஒரு டேப் கொண்டு நேர் செய்து அந்த இடத்தில் திசைகாட்டியை வைத்து பார்க்கும் பொழுது, அந்த திசைகாட்டி 360 டிகிரிகளை காட்டும் அல்லது, 10 டிகிரிகளை காட்டும் அல்லது, 20 டிகிரிகளை காட்டும் அல்லது, 350 டிகிரிகளை காட்டும்,அல்லது 340 டிகிரிகளை காட்டும். இப்படி காட்டுகின்ற பொழுது இதில் இந்த மனை  யோகத்தை செய்யுமா அல்லது, எது நன்மையைச் செய்யும்?.. வடக்கு வாசல் வைத்து வீடு கட்டினால் என்று பார்க்கும் பொழுது 360 டிகிரி இல் இருந்து 10 , 20 டிகிரிகள் திரும்பி இருக்கும் பொழுது வடக்கு வாசல் வைத்து வீட்டை கட்டலாம். ஒரு வேளை திசைகாட்டிக்கு திரும்பி இருந்தால் அதாவது 340 டிகிரிகள் வடக்கு காட்டினால் நீங்கள் அந்த இடத்தில் கட்டுகிற கட்டிடத்தை அதாவது வீட்டினை கிழக்கு பார்த்து கட்ட வேண்டும். அப்படி கிழக்கு பார்த்து கட்டும் பொழுது கிழக்கு டிகிரி என்பது 70 அல்லது 80° டிகிரிகள் காட்டும். அப்படி கட்டும் போது தான் அது யோகத்தை செய்கிற வீடாக இருக்கும். இப்படித்தான் வாஸ்து திசைகாட்டியை நாம் பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஒரு இல்லம் கட்டுவதற்கு திசைகாட்டி என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் வடக்கு பார்த்த வீடுகளை திசைகாட்டிக்கு பொருத்தி கட்ட வேண்டும். ஒரு சில மக்கள் என்னிடம் கேட்பார்கள் வீட்டை திருப்பி கட்டலாமா என்று கேட்பார்கள். 100% அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது என்று சொல்லுவேன். ஆக வாஸ்துபடி திசை காட்டி வடக்கு திசையில் எப்படி பொருத்த வேண்டும் என்பதனை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கின்றேன். நன்றி வணக்கம்.

💐💐💐💐💐💐

For English Translation

A lot of people have asked me the question of how to know the north direction through compass in terms of Vastu while buying a place.  In that sense, when we say north, we say zero or 360 degrees on the compass.  In that way, there is the northern road, and when you measure the north-west boundary of a place and the north-east boundary of a place with a tape and look at that place with a compass, the compass will show 360 degrees, or 10 degrees, or 20 degrees, or 350 degrees, or 340 degrees.  showing  When it is shown like this, will this house do yoga or what will be beneficial?.. When you see that if you build a house with the north door, when it is 10, 20 degrees away from 360 degrees, you can build the house with the north door.  If it is back to the compass i.e. 340 degrees north then you should build the building i.e. the house facing east at that place.  When looking towards the east, east degrees will show 70 or 80 degrees.  Only when it is built in that way will it be a house of doing yoga.  This is how we should look at Vastu compass and decide.  A compass is very important for building a house.  In that way, north facing houses should be built in alignment with the compass.  A few people ask me if I can rebuild the house.  100% I would say don’t do those mistakes for any reason.  So, I think you have learned how to fix the north direction according to Vastupadi through this post.  Thank you and hello. North Direction Vastu Compass,Vastu Compass onlineLive Vastu Compass,Vastu Compass app,Vastu compass degrees,Vastu Compass for Home,Vastu Compass app free,Free online Vastu Compass,Pivotal Vastu compass,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!