வீட்டிற்கு வர்ணம் வாஸ்து நிறங்கள் வாஸ்து

ஒரு இல்லத்திற்கு வர்ணம் பூசுகிற நிகழ்வு என்பது வாஸ்து வகையில் செய்கின்ற பொழுது அந்த வீடு ஒரு யோகத்தைச் செய்கிற வீடாக இருக்கும். அதே சமயம் ஒரு இல்லத்திற்கு அழகை கொடுக்குற நிகழ்வாகவும் இருக்கும். ஆக வர்ணங்களை ஒரு இல்லத்திற்கு  வர்ணங்கள் அடிக்கிற நிகழ்வு என்பது எப்பொழுதுமே கோடை காலங்களில் செய்வது நல்லது. அதாவது மாசி பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் செய்கின்ற பொழுது பெரிய அளவில் அந்த நிறம் என்பது வீட்டோடு நன்றாக ஒட்டி விடும். பெரிய அளவில் மழையில் கரைகிற நிகழ்வு இருக்காது. அதாவது மழைக் காலங்களில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் மாசி பங்குனி சித்திரை மாதங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும், அதிகபட்சம் ஏழு வருடங்களுக்கு ஒரு முறையும் நிறங்கள் அடிக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு சிமெண்ட் கலந்த வர்ணங்கள் தான் சரியானது. ஆயில் பெயிண்ட் அது நீண்ட நாட்களுக்கு வராது. ஆங்காங்கே திட்டு திட்டாக தெரியும். ஆகவே டிஸ்டம்பர் சார்ந்த வர்ணங்கள் தான் சரி. வர்ணங்களின் வகைகளில் பெயிண்ட் சார்ந்த வகைகளில் சுண்ணாம்பு ஒரு வகை குறைந்த செலவும், அதைவிட சிமெண்ட் பெயிண்ட் கொஞ்சம் அதிகமாகவும், டிஸ்டம்பர் அதனை விட கொஞ்சம் அதிக செலவாகும். பிளாஸ்டிக் எமல்சன் அதைவிட கொஞ்சம் அதிகமாகவும், சிந்தடிக் எனாமல் அதைவிட கொஞ்சம் அதிகமாகவும், நிறைவாக பாலிதீன் எனாமல் என்று சொல்லக்கூடிய வர்ணம் அதிக செலவாகவும் இருக்கும். உங்களுடைய பட்ஜெட் அதற்கு தகுந்தார் போல் நிறங்களை அடித்துக் கொள்வது சாலச்சிறந்தது. எப்பொழுதுமே எந்த கட்டிடத்திற்கும் முதலில் பிரைமர் கலவை  வர்ணங்களை அடிக்க வேண்டும். இது நீண்ட நாட்கள் குறைவில்லாமல் இருக்கும். அந்த வகையில் வீட்டின் வரவேற்புரைக்கு மஞ்சள் நீலம் பச்சை ஐவரி வர்ணங்கள் வாஸ்து வகையில் சிறந்தது. படுக்கை அறைக்கு நீல நிறம் மிகச் சிறந்தது. சமையலறைக்கு வெண்மை நிறமும், மஞ்சள் நிறமும் ஆரஞ்சு நிறமும் ரோஸ் நிறங்களும் சிறப்பு. உணவு உண்ணுகின்ற அறைக்கு  பச்சை நீளம் வெள்ளை நிறங்கள் வாஸ்து முறையில் சிறப்பு.
பாத்ரூம் சார்ந்த பகுதிகளுக்கு பிங்க் மற்றும் நீல நிறங்களை உபயோகிப்பது சாலச் சிறந்தது. இது வாஸ்து வகையில் யோகத்தை கொடுக்கிற நிறங்களாக இருக்கும்.

When a house is painted, when it is done in the form of Vastu, that house is a house that does a yoga. At the same time, it will be an event that gives beauty to a home. So it is always good to do the event of painting the colors to a house. That is, when Masi Panguni Chitra is done in the months of Vaikasi, the color will stick well with the house. There will be no event of large amounts of rain dissolving. This means that during the rainy season, the humidity will remain. Due to the high heat during summer, Masi Panguni Chitrai months should be used. A building should be painted at least once every three years and a maximum of seven years. Cement paints are perfect for new buildings. Oil Paint It will not come for a long time. It is visible here and there. So the colors based on December are correct. Among the types of paints, lime is a type of low cost, and cement paint is a little more expensive, and a little more than the distemper. Plastic emulsions are a little more than that, synthetic enamel a little more than that, and the color that can be called polythene enamel is more expensive. It is best to paint your budget as it suits you. First of all, primer should be painted first for any building. It will last for a long time. In that way, yellow, blue, green ivory colors are best for the salon of the house. Blue is the best for the bedroom. White color, yellow, orange and rose colors are special for the kitchen. Green length and white colors are special for the dining room. It is best to use pink and blue colors for bathroom areas. It will be the colors that give yoga in the form of Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!