வாஸ்து சார்ந்த விஷயத்துல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டுவது தான் சாலச் சிறந்தது. இந்த இடத்தில் ஒரு வீடு கட்டி கொடுக்கிற ஒரு ப்ரமோட்டர் வசம் நீங்கள் வீடு கட்டிக் கொடுங்கள், எல்லா வேலையும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது அந்த இடத்தில் வாஸ்து சார்ந்த விஷயத்திலும் நாம் ஏமாறக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடத்தில் இப்படித்தான் அமைப்பேன், இப்படித்தான் கட்டுவேன் என்கிற ஒரு சில விதிமுறைகளை அவர்கள் வகுத்து வைத்திருப்பார்கள் அந்த இடத்தில் நாம் மாட்டிக் கொள்வோம். சுயமாக வீடு கட்டுகின்ற பொழுது வேலை அதிகம் என்று நினைப்பார்கள் 100% அப்படி கிடையாது. ஒரு போன் செய்தால் மணல் வரும். செங்கல் வரும். சிமெண்ட் வரும். ஜல்லி வரும்.இப்படி எல்லா பொருட்களும் வந்து சேரும். இன்ஜினியர் மேஸ்திரி வசம் தனிப்பட்ட முறையில் நீங்கள் காண்டாக்ட் பேசிக்கொண்டு ஒரு பத்து பன்னிரண்டு லெவல்ல நான் பணம் கொடுப்பேன், இந்த 12 லெவல்லையும் நான் செக் பண்ணிக்குவேன் அப்படின்னு சொல்லிட்டு நீங்க ஒரு கட்டடத்தை ஆரம்பிக்கின்ற பொழுது, பெரிய வேலைகள் எல்லாம் கிடையாது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை இருக்கிறது அல்லவா?. அந்த நாளில் நீங்கள் பார்த்தால் கூட உங்களுடைய வேலை என்பது நிறைவாகி விடும். ஆக வீடு கட்டுவது என்பது பெரிய விஷயம் கிடையாது. இந்த இடத்தில் இடம் இருக்க வேண்டும். பணம் இருக்க வேண்டும். உழைப்பதற்கு உடல் வலிமை இருக்க வேண்டும். இந்த மூன்று இருந்தால் நிச்சயமாக ஒரு நல்ல வீட்டை சொந்தமாகவே யாரிடமும் மொத்தமாக விடாமல் கட்டிவிடுவது என்பது சாலச் சிறந்தது. ஆக வாஸ்து கூட இருக்கும் வீடாக , மிகச் சிறப்பான வீடாக அமைந்துவிடும்.வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம்,வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,
கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து அளவுகள்,வாஸ்து சாஸ்திரம் புத்தகம்,மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,