Trees in Vastu
ஒரு இல்லத்தில் மரங்கள் செடிகள் அமைக்கின்ற வாஸ்து முறையை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டின் அருகே ஒரு இல்லத்தின் அருகே காலியிடங்களில் எந்த பகுதிகளில் மரங்களை வைக்கலாம் என்று பார்க்கின்ற பொழுது தெற்கு மேற்கு சார்ந்த பகுதிகளில் தாராளமாக உறுதியான உயரமான மரங்களை வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் பெரிய அளவில் இடமிருந்தால் தான் அந்த வேலையை செய்ய முடியும். குறைந்தபட்சம் எட்டு அடிகள் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே மேற்கு பகுதியிலும் தெற்கு பகுதியிலும் குறைந்தபட்சம் எட்டு அடிகளுக்கு காலியிடம் இருந்தால் மட்டுமே மரங்களையும் செடிகளையும் வைக்க முடியும். அந்த வகையில் தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதிகளில் உயரமான நல்ல அடர்த்தியான மரங்களை வைத்துக் கொள்ளலாம். கிழக்கு சார்ந்த தென்கிழக்கு பகுதியில் ஓரளவுக்கு உயரமான மரங்களையும், மேற்கு சார்ந்த வடமேற்கு பகுதியில் வடக்கு சார்ந்த வடமேற்கு பகுதியில் கொஞ்சம் உயரம் குறைவாக இருக்கக்கூடிய மரங்களை வைத்துக் கொள்ளலாம். அதாவது மாதுளை மரம் கொய்யா சப்போட்டா போன்ற மரங்களை வைத்துக் கொள்ளலாம். பெரிய அளவில் இருக்கக்கூடிய உயர்ந்த மரங்களை மா மரம் போன்ற பெரிய அளவில் உயரமாக வருகிற மரங்களை தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதிகளில் வைத்துக் கொள்ளலாம். மாமரத்தையும் பலா மரங்களையும் தென்னை வேம்பு தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அதேபோல அசோக மரங்களையும், முந்திரி மரங்களையும், தைல மரங்களையும், சந்தன மரங்களையும், தேக்கு மரங்களையும், சவுக்கு மரங்களையும், பூவரசு மரங்களையும் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் ஒரு இல்லத்தில் புளியமரம் வைக்கக்கூடாது. அரச மரத்தையும் ஆலமரத்தையும் எக்காரணம் கொண்டும் வைக்க கூடாது . அதேபோல ஒரு இல்லத்தில் முல் மரங்கள் இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனாலும் வெள்ளை வேளான் மரத்தையும் கருவேல மரத்தையும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அது தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதியில் வைப்பது சாலச் சிறந்தது.இவற்றை வேறு எந்த பகுதியில் வைக்கக்கூடாது. உயரம் குறைந்த சிறிய அளவில் இருக்கிற துளசி செடி போன்ற செடிகளை கிழக்கின் மத்திய பாகத்தின் வடக்கு பகுதி சார்ந்த வடகிழக்கு வரையிலும், வடக்கின் மத்திய பாகம் சார்ந்த கிழக்கு பகுதி வரை அதாவது வடகிழக்கு பகுதி வரை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அதேபோல உயர்ந்த மரங்களை வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் வைப்பது வாஸ்துவின் ரீதியாக தவறு. ஆக சரியான முறையில் மரங்களை வைத்து பலமோடு வாழ வாழ்த்துக்கள். அதே சமயம் முருங்க மரங்களை வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்வார்கள். தாராளமாக வீட்டில் வெளிப்புறப் பகுதியில் வீட்டின் அருகிலேயே தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு காரணம் என்ன என்று சொன்னால் அந்த காலத்தில் முருங்கமரம் ஒரு வெட்டையான ஒரு பெரிய நார்ச்சத்து இல்லாத மரம். அந்த மரத்தில் குழந்தைகள் ஏறி விளையாடுகின்ற பொழுது அது எளிதில் உடைந்து விடும். ஆகவே அடிபடக்கூடிய கீழே விழுகிற ஒரு நிகழ்வு ஏற்படும். ஆகவே செண்பகமரத்தையும் முருங்கை மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம் என்று ஒரு நிகழ்வுக்காக சொன்னார்களே தவிர வாஸ்து ரீதியாக எந்த விதமான தவறுகளும் கிடையாது.
Trees in Vastu வாஸ்து வகையில் மரங்கள், Trees in Vastu,மரங்கள் வாஸ்து ,Vastu – Trees, Plants Tamil vastu,வாஸ்து மரங்கள் ,செடிகள் vastu for trees in tamil,வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்,வீட்டை சுற்றி மரங்கள் வாஸ்து,Which tree is good in front of house as per Vastu,Which tree is good in front of house in India,tree in north-east corner vastu,Mango tree in front of house Vastu,plants in north-west vastu,Orange tree Vastu direction,Plants in west direction Vastu,Best direction for plants according to Vastu,