வாஸ்து வகையில் சுற்றுச் சுவர்கள்

வாஸ்து வகையில் சுற்றுச் சுவர்கள்

வாஸ்து வகையில் சுற்றுச்சுவர்கள் உயரம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் தெற்கு சுவர் எப்பொழுதுமே உயரமாக இருக்க வேண்டும். அதற்கு பிறகு வடக்கு சுவர் தாழ்ந்து இருப்பது நலம். அதேபோல மேற்கு சுவர் உயர்ந்திருக்க வேண்டும் . அதற்கு பிறகு தாழ்ந்த அமைப்பில் கிழக்கு சுவர் இருக்க வேண்டும். கிழக்கு சுவர் என்பது கோணல் மாணலாக இருப்பது ஆண்களின் வாழ்க்கைக்கு கோணல் சார்ந்த விஷயங்களை கொடுக்கும். தெற்கு சுவரில் கோணல் மாணலாக இருப்பது பெண்களின் வாழ்க்கையில் சிரமத்தை கொடுக்கும். மேற்கு சுவரில் கோணங்கள் இருப்பது பலவிதமான நஷ்டங்களை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். வடக்கு சுவரில் கோணங்கள் என்பது பெண்ணிற்கும், பொன்னுக்கும், சொத்திற்கும் கஷ்டங்களைக் கொடுக்கும். ஈசானத்தில் வட்டத்தில் வருகிற சுற்றுச்சுவர் வம்சத்தை தடை செய்யும். அக்னி நைருதி வாயுவங்களில் வட்டமான சுற்றுச்சுவர் மூலமட்டமாக இல்லாவிடில் பீடைகளை கொடுக்கும். பல திசைகளுக்கு திரும்பியுள்ள சுற்றுச்சுவர் உயரங்கள் என்பது எல்லா பக்கத்திலும் சமமாக வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. இல்லை என்று சொன்னால் தென்கிழக்கு பாதியில் மற்றும் தெற்கு முழுவதும் மற்றும் தென்மேற்கு பாதியும் ஒரே அளவாக உயரத்தில் வைப்பது மிகப் பெரிய யோகத்தை கொடுக்கிற சுற்றுச்சுவராக இருக்கும். சுற்றுச்சுவர் காம்பவுண்ட் இல்லாத ஒரு இல்லம் காற்றில் வெட்டவெளியில் எரிகின்ற ஒரு விளக்கு போல. சுற்றுச்சுவர் இருக்கிற வீடு ஒரு கவச குண்டலத்தை மார்பில் அணிந்து இருப்பதற்குச் சமம். ஆக ஒரு இல்லத்திற்கு காம்பவுண்ட் சுவர் என்பது பிரதானம். வாஸ்து வகையில் சுற்றுச்சுவர்கள் அமைத்து யோக வாழ்க்கையை வாழுங்கள்.
In terms of Vastu, the height of the surrounding walls is very important. In that sense, the southern wall should always be high. After that, it is better to have a low northern wall. Similarly, the western wall should be high. After that, the eastern wall should be in a low structure. The eastern wall being angular will give angular matters to the life of men. Having an angular wall on the southern wall will cause difficulties in the life of women. Having angles on the western wall will be an event that will cause various losses. Angles on the northern wall will cause difficulties for women, gold, and property. A circular surrounding wall in the north will prevent the dynasty. In the Agni, Nairuti, and Vayuvas, a circular surrounding wall, if not level, will give pitas. It is very good to keep the heights of the surrounding walls facing many directions equal on all sides. If not, then keeping the southeast half, the entire south, and the southwest half at the same height will be a surrounding wall that gives great yoga. A house without a compound wall is like a lamp burning in the open air. A house with a compound wall is like wearing a shield on its chest. Therefore, a compound wall is essential for a house. Build compound walls according to Vastu and live a yogic life. வாஸ்து வகையில் சுற்றுச் சுவர்கள்,வாஸ்து சாஸ்திரத்தின் படி சுற்றுச் சுவர்கள்,காம்பவுண்டு சுவர் அமைப்பு வாஸ்து,வீட்டு காம்பவுண்டு சுவர் கட்டும் விதிமுறைகள்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!