நீங்கள் கட்டுகிற வீடு, நீங்கள் ஏற்கனவே குடியிருந்து வருகிற வீடு, ஒருவருடைய அலுவலகம், ஒருவரின் தொழிற்சாலை கட்டிடங்கள் எல்லா இடங்களுமே சதுரம் அல்லது செவ்வக வாஸ்து விதிகளுக்கு வர வேண்டும். இந்த விதிகளில் இல்லாத ஒரு கட்டிடம் இருக்கிறது என்று சொன்னால் வாஸ்து வகையில் அது வெற்றியை கொடுக்காது. ஒரு சிலர் வடகிழக்கு இழுத்து இருந்தால் நல்லது என்று கட்டிடத்தை இழுத்த அமைப்பில் செய்வார்கள். அதனை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. இந்த இடத்தில் இழுத்து இருப்பது என்பது இடத்தின் வகையில் இழுத்திருக்கலாம். ஆனால் கட்டிடத்தில் இழுத்திருக்கக் கூடாது இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்ததாக சதுரம் என்கிற விதிகள் ஒரு இல்லத்திற்கு வரக்கூடாது என்கிற சந்தேகங்கள் ஒரு சிலருக்கு உண்டு. அதாவது சதுரம் என்பது கோயில்களுக்கு உள்ள விஷயம் அதை வீடுகளுக்கு செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட எந்த விதிகளும் வீடு கட்டுவதில் கிடையாது. குறிப்பாக சொன்னால் சதுர வீடுகளில் தான் அனைத்து அறைகளும் சரியான இடத்தில் அமைத்துக் கொள்ள முடியும்.ஆக எந்த திசையில் மூலையில் இழுத்து கட்டிடங்கள் வரக்கூடாது. எந்த இடத்திலும் குறைத்தும் கட்டிடங்கள் வரக்கூடாது . வாஸ்து வகையில் மிக மிக முக்கியமான இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
The house you are building, the house you are already living in, someone’s office, someone’s factory buildings, all places should follow the square or rectangular Vastu rules. If you say that there is a building that does not follow these rules, it will not give success in terms of Vastu. Some people will say that it is better if it is pulled towards the northeast and will make the building in a pulled configuration. This should not be done for any reason. Being pulled in this place may be pulled in terms of location. But it should not be pulled in the building. This should be taken into account. Next, some people have doubts that the rules of square should not be applied to a house. That is, they say that square is something that is in temples and should not be applied to houses. There are no such rules in building a house. Specifically, only in square houses can all the rooms be arranged in the right place. Therefore, buildings should not be pulled in any direction and come in corners. Buildings should not come in any place by reducing. This is very, very important in terms of Vastu.