வாஸ்து சார்ந்த வகையில் ஒரு கட்டிடத்தில் தென்மேற்கு திறப்பு என்பது மிக மிக மோசமானது. அது வடக்கு பார்த்த வீடாக இருந்து தெற்கு பகுதி சார்ந்த பகுதியை திறந்து வைப்பது என்பதுதவறு. வாஸ்து வகையில் அது மேற்கு பார்த்த வீடாக இருந்து அந்த பாகத்தை திறந்து வைப்பது மிக மிக தவறு. அதேபோல தெற்கு பார்த்த வீடாக இருந்து தென்மேற்கு பகுதியை திறந்து வைத்து வெளியே செல்வதோ, தென்மேற்கு பகுதியில் கடைகளை கட்டி இந்த கடையில் இருந்து உள்ளே வழி ஏற்படுத்தி வீட்டுக்கு செல்வது மிக மிக மோசமானது. அதேபோல கிழக்கு பார்த்த வீடுகளில் தென்மேற்கு திறப்பும், மேற்கு பார்த்த வீடுகளில் தென்மேற்கு திறப்பும், தெற்கு பார்த்த வீடுகளில், தென்மேற்கு திறப்பும், வடக்கு பார்த்த வீடுகளில் தென்மேற்கு திறப்பும் தவறு என்று சொன்னாலும் கூட, மிக மிக மோசமான விளைவுகளை கொடுக்கக்கூடிய திறந்த அமைப்பு என்பது தெற்கு பார்த்த வீட்டிற்கு மிகவும் தவறாக வேலை செய்யும் என்று சொல்லலாம். அதற்குப் பிறகு மேற்கு பார்த்து வீட்டிற்கு சாலைகளில் இருந்து தென்மேற்கு திறந்தால் மிக தவறு என்று சொல்லலாம். மற்றது கூட தவறாக இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் கொடுக்காது. ஆனால் தெற்கு பார்த்த மேற்கு பார்த்த வீடுகளில் சாலைகளில் இருந்து திறப்புக்கள் இருந்தால் நிச்சயமாக போர்க்கால அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
In terms of Vastu, a southwest opening in a building is very, very bad. It is wrong to open the south-facing part of a house from a north-facing house. In terms of Vastu, it is very, very wrong to open that part from a west-facing house. Similarly, leaving the southwest part open from a south-facing house to go out, or building shops in the southwest and making a way inside from this shop to go into the house is very, very bad. Similarly, even if it is said that southwest opening in east-facing houses, southwest opening in west-facing houses, southwest opening in south-facing houses, and southwest opening in north-facing houses is wrong, it can be said that an open structure that can give very, very bad results will work very badly for a south-facing house. After that, it can be said that if the southwest opening from the roads to the west-facing house is very wrong. Even if the rest is also wrong, it will not cause much harm. But if there are openings from the roads in south-facing and west-facing houses, then definitely a change should be made on a war footing.