வாஸ்து சீர்திருத்தம் என்பது தவறான அமைப்பில் இருக்கும் கட்டிடத்தை இடித்துவிட்டு சரியான அமைப்பில் மாற்றம் செய்வதே ஆகும். இதில் கண்டிப்பாக ஒரு இடத்தில் வடக்கும் கிழக்கும் காலியிடம் என்பது வேண்டும். ஒரு கட்டிடம் இருப்பதே பத்து அடி என்று சொன்னால் அதில் எங்கு காலி இடத்தை விடுவது என்று நினைத்தால் நிச்சயமாக எதுவும் நடக்காது. 10 அடி இருந்தாலும் ஒரு இரண்டு அடியாவது இடைவேளை இருக்கும் அமைப்பில் கட்டிடத்தை மாற்றி வைக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அந்த இடம் விற்பனைக்கு வந்துவிட வேண்டும் . ஆக ஒரு செங்கலை கூட நான் எடுக்க மாட்டேன் என்று முடிவு செய்தால் அது ஒன்று பெண் வீடாக இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அந்த வீட்டில் ஆண்களை சரியான முறையில் வாழவைக்கிற செயலை செய்யாது . அதாவது வடக்கு கிழக்கு திறந்து இருக்கிறே வீடுகள் தான் ஒரு மனிதர்களை வாழ வைக்கும். ஒருவருக்கு தன்னம்பிக்கையை தருகிற விஷயம் வடக்கு கிழக்கு திறப்புகள் தான். எந்த இடத்திலும் ஈசானியம் அடைபடும் விதமாக ஒரு கட்டிடத்தில் வாழ்வது என்பது மிக மிக தவறு. ஆக தவறான ஒரு வீட்டில் வாழுகின்ற பெரியவர்கள் தான் அதாவது வயதான ஆண்களோ பெண்களோ தான் அந்த இடத்தில் தெய்வங்கள். ஏனென்று சொன்னால் ஒவ்வொரு நிலைக்கும் எதிர்வினை உண்டு என்கிற அமைப்பில், ஈசானிய பரிகாரமாக அந்த வீட்டில் இருக்கிற ஆண்களோ பெண்களோ தான் பரிகாரமாக அந்த இடத்தில் எதிர்மறை பலன்களை தடுக்கும் விதமாக மூத்தோர்கள் அந்த இடத்தில் இருப்பார்கள். ஆக எந்த இடத்திலும் பெரியவர்களை கைவிட்டு விடக்கூடாது. அவர்களுடைய காலம் வரையில் பெரிய அளவில் அந்த வடகிழக்கு வாஸ்து தவறுகள் அவர்களை ஒன்றும் செய்யாது நல்ல படியாக வைத்து இருக்கும். ஆக கர்மவினையிலிருந்து ஒருவரை காக்கிற செயலை செய்வது வீட்டின் பெரியவர்கள். ஆக பெரிய அளவில் வாஸ்து சாஸ்திர தவறுகள் இருந்தாலும் அங்கு வாழும் மூத்த மனிதர்கள் அந்த இல்லத்தில் இருக்கும் வரை பெரிய அளவில் துன்பத்தைக் கொடுக்காது. அவர்களுடைய காலத்திற்கு உள்ளாக அந்த இடத்தின் வாஸ்து தவறாக இருக்கும் கட்டிடத்தின் மாற்றுங்களை சரி செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்த இடத்தில் இருந்து மாறி விடுங்கள். இது முழுக்க முழுக்க எனது சொந்த அனுபவப் பதிவு. எந்த இடத்திலும் ஒரு இடத்திற்கு வாஸ்து பார்க்க செல்லுகின்ற பொழுது பெரியவர்களை வணங்குகிற செயலை எந்த இடத்திலும் நான் மறக்க மாட்டேன்.ஏன் என்று சொன்னால் வீட்டின் மூத்தவர்கள் தான் நமது குழந்தைகளை வாழ வைக்கிறார்கள் என்று சொல்ல முடியும்.அவர்கள் எதிர் செயலுக்கு தடைக்கல்லாக இருந்து இளையவர்களை வாழ வைக்கின்றனர்.இதே ஒரு பழக்கம் முஸ்லிம் சமூகத்தில் உண்டு வீட்டில் மூத்தழர்களை பேணி காப்பாற்றி வருவார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் வாஸ்து இருக்காது என்றாலும் இந்த பழக்கம் அவர்களை வாழ வைக்கும்.
Vastu reform is the process of demolishing a building in a wrong configuration and changing it to a correct configuration. In this, there must be a vacant space in the north and east. If you say that a building is supposed to be ten feet long, then if you think about leaving a vacant space somewhere in it, then nothing will happen. Even if it is 10 feet, the building should be changed to a configuration with at least a two-foot gap. If you say no, the place should be sold. So if you decide that I will not take even a single brick, it should be a women’s house. If you say no, it will not do anything to make men live in that house in a proper way. That is, houses with north-east openings will make a man live. The thing that gives a person self-confidence is the north-east openings. Living in a building in a way that obstructs the flow of life in any place is very, very wrong. So, the elders who live in a wrong house, that is, old men or women, are the gods of that place. Why do you say that in the system where every situation has a reaction, the men or women in that house are the only ones who are the solution, and the elders are there to prevent negative effects in that place. So, elders should not be abandoned anywhere. Until their time, those large-scale northeast Vastu mistakes will not do them any good and will keep them in good stead. So, the elders of the house do the work that protects one from karmic consequences. So, even if there are large-scale Vastu mistakes, as long as the elders living there are in that house, they will not cause much suffering. Within their time, correct the changes in the building where the Vastu of that place is wrong. If not, move away from that place. This is entirely my own experience. Whenever I go to a place to see Vastu, I will never forget the act of worshiping the elders. If I say why, it can be said that the elders of the house are the ones who keep our children alive. They are a barrier to negative actions and keep the younger ones alive. This is a habit in the Muslim community, where they take care of the elders in the house and protect them. Even though they may not have a large amount of wealth, this habit will keep them alive.