வாஸ்து குளியலறை Vastu bathroom
வாஸ்து வகையில் குளியலறை வசதிகள் என்பது நமது சௌகரியத்தோடு வாஸ்துவையும் இணைத்து வைப்பது நல்லது. வாஸ்துவையில் பொருத்தி வைக்கும் பொழுது நல்ல ஒரு யோகத்தை செய்கிற வீடாக இருக்கும் . ஒரு வீட்டில் முக்கியமாக முதலிடம் தருகிற விஷயம் படுக்கையறை, குளியலறை மற்றும் கழிவறை, சமையலறை சார்ந்த விஷயங்களில் நமது சவுகரியமும் முக்கியம் வாஸ்துவும் முக்கியம். ஒரு இல்லத்தில் குளியல் அறை கழிவறை தான் டாக்டர் என்று கூட சொல்வேன். அங்கு சுத்தமாக சுகாதாரமாக இருக்கின்ற பொழுது நோய் நொடிகள் முதலில் உங்களை தாக்காது. ஆகவே எப்பொழுதுமே சுத்தமாக இருக்க வேண்டும். வாஸ்து விதிகளின்படி குளியல் அறை என்பது வடமேற்கு பகுதியில் இருப்பது சாலச்சிறந்தது. இல்லை என்று சொன்னால் வடக்கு மத்திய பாகத்திலும், தெற்கு மத்திய பாகத்திலும், கிழக்கு மத்திய பாகத்திலும், மேற்கு மத்திய பாகத்திலும் கூட வரலாம். இந்த நான்கு திசைகளை கவனிக்கின்ற பொழுது முதல் இடத்தில் இடம்பெறுகிற ஒரு நிகழ்வு மேற்கு மத்திய பாகமும் வடக்கு மத்திய பக்கமும் எடுத்துக் கொள்ளலாம் என்பேன்.
அதேபோல குளியல் அறையில் நல்ல காற்றோட்டம் வெளியே உள்ளே செல்கிற அமைப்பு வேண்டும். அதாவது வெண்டிலேட்டர் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் சார்ந்த விஷயங்கள் வேண்டும். அதேபோல குளியல் அறையில் பாத் டப் அமைப்பது என்னை பொறுத்த அளவில் வாஸ்து வகையில் தவறு. சுடு தண்ணீர் வேண்டும் என்று சொன்னால் தாராளமாக வாட்டர் ஹீட்டர் பொருத்திக் கொள்ளலாம். அல்லது மாடியின் மேல் தளத்தில் சோலார் ஹீட்டர் பொருத்திக்கொண்டு அதன் வழியாக தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். குளியல் அறையின் சுவர்களில் டைல்ஸ் கட்டாயம் ஒட்டுவது சிறப்பு. அந்த டைல்ஸ் என்பது அந்த குளியல் அறையின் நிறத்திற்கு தகுந்தார் போல இருக்க வேண்டும். எப்பொழுதுமே குளியல் அறையில் உடைந்த மார்பில் பீஸ்களை உடைந்த டைல்ஸ் போன்ற விஷயங்களை அப்புறப்படுத்தி விடுவது நல்லது. வாரம் இருமுறை சுத்தப்படுத்துவது நல்லது. அனைவரும் குளித்த பின்பு தினம் ஒருமுறை சாதாரணமாக சுத்தப்படுத்துவது நல்லது. வாஸ்து வகையில் குளியல் அறையின் அளவுகள் என்பது குறைந்தபட்சம் ஐந்து அடிக்கு நான்கு அடி ஆகவும், ஆறடிக்கு நான்கடி ஆகவும், எட்டடிக்கு நான்கடி ஆகவும் அல்லது , ஆறு அடிகளுக்கு பத்தடியாகவும், பத்தடிக்கு 16 அடிகள் ஆகவும் இருக்கலாம். குளியல் அறையில் துருப்பிடிக்காது இருப்பதற்காக பிளாஸ்டிக் சார்ந்த கதவுகளை பொருத்துவது சாலச் சிறந்தது. அந்த குளியல் அறையின் கதவுகள் என்பது உச்ச நிலையில் இருக்க வேண்டும்.அதாவது கிழக்கு என்றால் வடக்கு பக்கமும், வடக்கு என்றால் கிழக்கு பக்கமும் வாஸ்து வகையில் உச்ச நிலையில் இருப்பது சிறப்பு.
Bathroom facilities in terms of Vastu means that it is better to associate Vastu with our comfort. When it is fixed in Vastu, it will be a house that does a good yoga. The most important thing in a house is the bedroom, bathroom and toilet, our comfort and Vastu is important in kitchen related matters. I would even say that the bathroom is the doctor in a home. When it is clean and hygienic there, the disease will not attack you in the first place. So it should always be clean. According to the rules of Vastu, it is best to have a bathroom in the North-West. If you say no then you can come in North Central, South Central, East Central and even West Central. When observing these four directions, an event that takes place in the first place can be taken as West Central and North Central.
Similarly, the bathroom should have a good ventilation system. That means ventilator and exhaust fan related things. Similarly, installing a bathtub in the bathroom is wrong in terms of Vastu as far as I am concerned. If you want hot water, you can easily install a water heater. Or you can install a solar heater on the upper floor of the floor and take water through it. It is special to have tiles on the walls of the bathroom. The tiles should match the color of the bathroom. It’s always a good idea to throw away things like broken tiles, broken chest pieces, and more in the bathroom. It is best to cleanse twice a week. It is best to clean once a day after everyone has taken a bath. The dimensions of a bath in Vastu terms can be at least five feet by four feet, six feet by four feet, eight feet by four feet, or six feet by ten feet and sixteen feet by ten feet. It is best to install plastic doors in the bathroom to prevent rust. The doors of the bathroom should be in the highest position. That means east means the north side and north means the east side is special in Vastu terms. வாஸ்து குளியலறை, Vastu bathroom,வீட்டின் குளியலறை வாஸ்து ,Vastu for bathroom and toilet,
Vastu for toilet seat facing direction,Vastu remedies for toilet in North direction,toilet in north-west corner as per vastu,Vastu remedies for toilet in south direction,Toilet seat facing east remedies,