வாஸ்து என்பது நமது நேரத்தோடு இணைந்து இருக்கிற விஷயம் தான் என்று சொல்லுவேன். அதாவது நம்ம நேரம் நன்றாக இருந்தால் நல்ல வீடு வாஸ்து வகையில் கிடைக்கும். நேரம் சரியில்லாமல் இருந்தால் வாஸ்து வகையில் நல்ல வீடு கிடைக்காது. ஒரு வேளை எல்லா விஷயங்களையும் கடந்து ஒரு நல்ல வீட்டை நீங்கள் கட்டி முடித்தாலும், தற்போது வாழ்கின்ற வீட்டின் தொடர்பு உடனடியாக புதிய வீட்டிற்கு உங்களை வரவழைக்காது. பழைய வீட்டின் வாஸ்து அவர்கள் புதிய வீட்டில் வருகைக்கு இடம் தராது என்று சொல்லுவேன். குறிப்பாக ஒரு பழைய இல்லத்தில் வடகிழக்கு குற்றங்களோ, வடமேற்கு குற்றங்களோ அவ்வளவு சீக்கிரத்தில் புதிய வீட்டிற்கு உங்களுடைய பயணத்தை தடுக்கும். அதே சமயம் நீங்கள் புதிய வீடு கட்டுகிறிர்கள் என்று சொன்னால், அதாவது ஒரு பாசத்தின் அடிப்படையில், அன்பின் அடிப்படையில் உங்களுடைய குழந்தைகள் எனக்கு வீடு இப்படித்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இந்த இடத்தில் சாஸ்திரங்களை இன்றைய தலைமுறையினர், இன்றைய தலைமுறை குழந்தைகள் ஒரு சிலர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி இருக்கின்ற பொழுது எனக்கு படிஅமைப்பு இந்த அமைப்பில் தான் வேண்டும், வீட்டின் படுக்கை அறை அமைப்பு இந்த மாதிரி தான் வரவேண்டும், இந்த இடத்தில் தான் வரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து தவறான அமைப்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆக இந்த இடத்தில் உங்களுடைய நேரம்தான் நல்ல வீட்டிற்கு வருவதற்கு வழி செய்யும் என்று சொல்வேன். எங்களைப் போன்ற வாஸ்து மனிதர்கள் பல விஷயங்களை சுட்டிக்காட்டினாலும், உங்கள் நேரம் சரியாக இருந்தால் மட்டுமே நல்ல ஒரு வீட்டில் குடியேற முடியும். இது ஒரு வாஸ்து சார்ந்த விழிப்புணர்வு பதிவு.
I would say that Vastu is something that is connected to our time. That is, if our time is good, we will get a good house in terms of Vastu. If the time is not right, we will not get a good house in terms of Vastu. Maybe even if you overcome all the issues and build a good house, the connection of the house you are currently living in will not immediately invite you to the new house. I would say that the Vastu of the old house will not allow them to come to the new house. Especially in an old house, northeast or northwest faults will prevent your journey to the new house so soon. At the same time, if you say that you are building a new house, that is, based on affection, based on love, your children will insist that I want the house like this. In this place, today’s generation, some of the children of today’s generation will not accept the shastras. In such a situation, they will insist that I want the staircase layout in this layout, the bedroom layout of the house should be like this, and it should be in this place, and they will create a wrong layout. So I would say that your time will make it possible to come to a good house. Even though Vastu people like us point out many things, you can only settle in a good house if your timing is right. This is a Vastu-based awareness post.