வாஸ்து உண்மை Vastu rules of truth

வாஸ்து உண்மை விதிகள் Vastu rules of truth

வாஸ்து என்று சொன்னாலே மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்ட விதிகள் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு தான் அன்றைய காலகட்டத்தில் வாஸ்து என்கிற விதி இருந்தது. அந்த பிரம்மாண்டமான கட்டிடங்களை இன்று சாதாரணமாக எல்லோருமே கட்டுகின்றோம். அது சிறிய அளவிலாக இருந்தாலும் சரி அல்லது பெரிய அளவில் இருந்தாலும் சரி. அந்த வகையில் ஒவ்வொரு அறையின் உயரம் என்பது 12 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அதேபோல ஒரு கட்டிடம் கட்டும்பொழுது செங்கற்களை எப்பொழுதுமே நன்றாக குளிர வைத்து நலைத்து பயன்படுத்துவது நல்லது. அதேபோல ஒரு அறை என்பது குறைந்தபட்சம் 6 க்கு 10 ஆக அல்லது, எட்டுக்கு பத்து ஆக அல்லது, பத்துக்கு பத்து ஆக இருக்க வேண்டும். ஆனால் வாஸ்து விதிகள் என்பது குறைந்த நீளமும் அகலமும் முடிந்தால் உயரமும் இருக்கக்கூடிய இடமாக வடகிழக்கு பகுதி இருக்க வேண்டும். ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் அது போன்ற அறையை கொடுக்காது மற்ற பகுதிகளில் கொடுப்பது தவறு. இதனை கருத்தில் கொண்டு ஒரு இல்லத்தை அமைப்பது சாலச் சிறந்தது. தரைத்தளங்களை வாஸ்து விதிகளுக்காக தென்மேற்கு உயர்த்தியும், வடகிழக்கு தாழ்த்தியும் அமைக்க சொல்லுகின்ற போது அது கட்டிட அமைப்பில் நிச்சயமாக முடியாது. அப்படி இருக்கின்ற நிகழ்வுகளில் ஒரு விஷயத்தை நீங்கள் செய்யலாம். தென்மேற்கு சார்ந்த அறையை ஒரு இரண்டு அங்குலம் உயர்த்தி நிலவுகால் வைத்து தனி அறையாக அமைத்துக் கொள்ளலாம் . அதன் பிறகு மற்ற அறைகளை வடமேற்கு மத்திய பாகம், தென்கிழக்கு எல்லா பகுதிகளும் ஒரே சமமாகவும் அதற்கு பிறகு வடகிழக்கு ஒரு இரண்டு அங்குலம் குறைத்து அமைத்துக் கொள்ளலாம். இதிலிருந்து என்ன ஆகும் என்று சொன்னால் தென்மேற்கு உயர்ந்து வடமேற்கு தென்கிழக்கு மத்திய பாகங்கள் தாழ்ந்தும், அதனை விட வடகிழக்கு தாழ்ந்த அமைப்பாக வாஸ்து ரீதியாக யோகத்தை செய்கிற ஒரு வீடாக இல்லமாக இருக்கும்.

When you say Vastu, the rules laid down so that man should live healthily, Vastu was the rule of those days only for gigantic buildings.  We all build those gigantic buildings today.  Be it small scale or large scale.  In that case the height of each room should not be less than 12 feet.  Similarly, when building a building, it is always better to cool and grind the bricks.  Similarly a room should be at least 6 by 10 or eight by ten or ten by ten.  But the rules of Vastu dictate that the north-east should be the place where the length and width are the least and the height if possible.  It is wrong to give such a room in the north-east part of a house and give it in other parts.  It is best to design a home with this in mind.  When the floors are asked to raise the south-west and lower the north-east for Vastu rules, it is definitely not possible in the building system.  In such cases you can do one thing.  A south-west facing room can be set up as a separate room by raising it by one or two inches and placing the moon foot.  After that the rest of the rooms can be arranged with the north-west central part, all the south-east parts being equal and then the north-east one or two inches less.  If we say what will happen from this, South-West will rise and North-West, South-East central parts will fall, and than that, North-East will be a lower structure, Vastu-wise it will be a house doing yogam. வாஸ்து உண்மை விதிகள், Vastu rules of truth,TRUE SCIENCE BEHIND VASTU ,Vastu Vs Science | வாஸ்து | Vaastu important Tips,வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) ,வாஸ்து என்பது உண்மையா பொய்யா?,வாஸ்து சாஸ்திரம் – விக்கிபீடியா,வாஸ்து சாஸ்திர கட்டுக்கதைகள்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!