வாஸ்து அடிப்படையில் ஒரு இடம் தேர்வு
வாஸ்து அடிப்படையில் ஒரு இடம் தேர்வு: ஒரு காலி மனை வாங்குவதற்கு, ஒரு வீடு கட்டுவதற்கு, அல்லது ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு மனையை தேர்ந்தெடுப்பது சிறப்பு . அந்த வகையில் மனை வாங்குகிற பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய வாஸ்து விதிகள் என்ன என்பதை பார்ப்போம். ஒரு இடம் வாங்கும் பொழுது அதன் திசை என்பது மிக மிக முக்கியம். ஒரு இடம் வாங்கும்போது முதல் சிறப்பாக கிழக்கு மற்றும் வடக்கு பார்த்து மனை வாங்குவது சிறந்தது அல்லது, பெரிய ஏக்கர் கணக்கில் வாங்குகிற பொழுது எந்த திசை பார்த்த மனையாக இருந்தாலும் தவறு கிடையாது. ஒரு மனை வாங்குகிற பொழுது சதுரம் அல்லது செவ்வகம் முக்கியம். அப்படி இல்லை என்று சொன்னால் அதை சரி செய்வது மிக மிக முக்கியம். இயற்கையாகவே ஒரு இடத்தில் வடக்கு சார்ந்த வடகிழக்கு பள்ளமாக தெற்கு சார்ந்த தென்மேற்கு உயரமாக இருந்தால் சிறப்பு. ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதியில் இயற்கையாக பள்ளங்கள் ஆறுகள் ஓடைகள் இருப்பது பொது கிணறுகள் குளங்கள் ஏரிகள் இருப்பது சிறப்பு. அப்படி ஏரி குளங்கள் இருந்தால் அதன் கரை உயரமாக இருக்கின்ற பொழுது வாஸ்து குற்றமாக முடிந்துவிடும் அதையும் கவனிக்க வேண்டும். ஒரு மனையின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பகுதிகளில் உயர்ந்த மலைகள் குன்று கோபுரங்கள் கட்டிடங்கள் இருப்பது சாலச் சிறந்தது. இதனை கவனித்து ஒரு இடத்தை மனை வாங்குவது நலம்.
Selection of a location based on Vastu: Choosing a plot based on Vastu Shastra is important for buying a vacant plot, building a house, or starting a factory. In that way, let us see what are the important Vastu rules to be observed while buying land. When buying a place, its direction is very important. When buying a place, it is best to buy a plot facing east and north, or if you are buying a large acreage, there is nothing wrong with any direction. Square or rectangle is important when buying a plot. If you say no, it is very important to correct it. Naturally, it is special if a place has a north-oriented northeast depression and a south-oriented southwest elevation. The north-east side of a place is characterized by the natural presence of depressions, rivers, streams, public wells, ponds and lakes. It should also be noted that if there are such lakes and ponds, when its bank is high, it will end up as a violation of Vastu. It is better to have high hills, hillock towers and buildings in the southern parts of a plot and in the southwestern parts. It is good to take care of this and buy a plot.வாஸ்து அடிப்படையில் ஒரு இடம் தேர்வு,வாஸ்து அடிப்படையில் ஒரு மனை,மனை தேர்வுக்கான வாஸ்து,இந்த வாஸ்து பிரச்னை உங்களை ஏழையாக்கலாம்,வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரம்,