வாஸ்து வகையில் மனையடி சாஸ்திரம் உண்மையா?

வாஸ்து வகையில் மனையடி

வாஸ்து வகையில் மனையடி சாஸ்திரம் என்று சொல்கிற விஷயம் உண்மையா?, பொய்யா?. என்கிற ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை. இந்த இடத்தில் வாஸ்துவை பிரதானப்படுத்த வேண்டுமா? மனையடி அளவுகளை பிரதானப்படுத்த வேண்டுமா? என்கின்ற ஒரு கேள்வியை கேட்கின்ற பொழுது, என்னைப் பொருத்த அளவில் வாஸ்து என்பது தான் முக்கியம். மனையடி, குழி கணக்கு, ஆயாதி அளவுகள் என்பது இரண்டாம் பட்சம் தான். நவீன காலத்திற்கு அது பொருந்தாது என்று கூட சொல்லலாம். ஆக இந்த இடத்தில் ஒரு மனிதர் ஒரு கேள்வி கேட்பார்கள் மனை அளவுகளில் 40 அடி என்பது சரியான அளவில் இல்லை. ஆனால் நான் வாங்குகிற மனை 40 அடி அகலத்தில் இருப்பது என்பார்கள். இந்த இடத்தில் வீட்டு கட்டிடத்தில் உள் அளவுகளே மனையடி ஆகும். இந்த இடத்தில் காலிமனைக்கு அந்த அளவுகளை பார்க்க வேண்டிய அவசியமென்பது வாஸ்து வகையில் கிடையாது. ஆக முதலில் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் மனையடி முக்கியமா? வாஸ்து முக்கியமா? என்று சொன்னால் மனையடி முக்கியம் கிடையாது. வாஸ்து சாஸ்திரத்தில் எங்கு எதனை வைக்க வேண்டும், எங்கு காலியிடம் விட வேண்டும் என்கிற அமைப்பு மிக மிக முக்கியம். ஒரு இடத்தில் 20 அடிகள் தான் இருக்கிறது. வடக்கும் கிழக்கும் இடம் விட வேண்டும் என்று சொன்னால் மனையடி பொருத்தி காலியிடம் விட்டு தான் கட்ட வேண்டும். அதனை விடுத்து மனை அடி அளவுகள் 20 அதனால் கிழக்கு எல்லை வரை வடக்கு பார்த்த இடத்தில் நான் கட்டிக் கொள்கிறேன் என்று முடிவு செய்வது வாஸ்து இல்லாத ஒரு கட்டிடமாக மாறிவிடும். இதை கவனத்தில் கொள்வது நலம்.

Is it true or false? We do not need research on this. Should Vastu be given priority here? Should the dimensions of the plot be given priority? When I ask a question, Vastu is the most important thing for me. Plot, pit calculation, and yard sizes are secondary. It can even be said that it is not suitable for modern times. So a person will ask a question in this place that 40 feet is not the right size in plot sizes. But they say that the plot I am buying is 40 feet wide. In this place, the internal dimensions of the house building are the plot. In this place, it is not necessary to look at those dimensions for the vacant plot. So the first thing one should know is whether plot is important? If you say, whether plot is important? Land is not important. In Vastu Shastra, the system of where to put what and where to leave empty space is very, very important. There are only 20 feet in a place. If you say that you want to leave space to the north and east, you should build on the vacant land. Instead, if you decide that the land size is 20 feet, so I will build in the place facing north up to the eastern boundary, it will turn into a building without Vastu. It is good to keep this in mind.https://chennaivastu.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!