மாடிப்படிகள் என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு வர வேண்டும். அதே சமயம் வடகிழக்கில் மாடிப்படிகள் இருந்தால் மரணம் என்கிற வார்த்தையை எங்களை பொறுத்த வாஸ்து நபர்கள் சொல்கிறார்கள். அதையும் முழுதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதற்காக மாடிப்படி தவறாக இருக்கிறது என்று சொல்லி பயந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நிறைய வாஸ்துவின் வாதங்கள் இருக்கின்றது. மக்களை பயப்படுத்துகிற விஷயங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் கடந்து தான் வாஸ்துவை நம் அணுக வேண்டும். அந்த வகையில் மேற்கு பார்த்து வீட்டிற்கு மாடிப்படி என்பது தென்மேற்கு பகுதியில் மட்டும் அமையுங்கள். மற்ற பகுதிகளில் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. இது முழுக்க முழுக்க 20 வருடங்கள் கடந்த எனது வாஸ்து அனுபவ பதிவு.