மாடிப்படி வாஸ்து

கட்டிடத்தில் மாடிப்படிகள் அமைக்க விதிமுறை என்பது மிக மிக முக்கியம். அப்படி அமைக்கின்ற பொழுது வெளிப்புறப்படியாக இருக்கின்ற பட்சத்தில் மேற்கு சார்ந்த வடமேற்கிலும், தெற்கு சார்ந்த தென்கிழக்கும், தெற்கு சார்ந்த தென்கிழக்கிலும், மேற்கு சார்ந்த வடமேற்கிலும், தெற்கு சாலை அல்லது மேற்கு சாலை இருக்கின்ற பட்சத்தில் தென்மேற்கு பகுதியின் தெற்கிலும், தென்மேற்கு பகுதியின் மேற்கிலும் அமைப்பது சாலச் சிறந்தது. வடக்கு பகுதியில் வெளிப்புறப்படி அமைக்கும் போது தொங்கும்படியாக அமைக்க வேண்டும். கிழக்கு பகுதியில் வெளிப்படியை அமைக்கும் போது தொங்குபடியாக அமைக்கலாம். அல்லது தொங்கும் படியும் இல்லாமல் கூட அமைக்கலாம். ஒரு சில இடங்களில் அது யோகத்தை கொடுக்கும் அமைப்பில் மாற்றி வைத்து கட்டும் பொழுது நல்லது செய்யும் படியாக இருக்கும். தெற்கு மேற்கு சார்ந்த பகுதிகளில் இடங்கள் அதிகமாக இருக்கின்ற பொழுது தென்மேற்கு சார்ந்த தெற்கிலும், தென்மேற்கு சார்ந்த மேற்கிலும் தொங்கும்படிகள் அமைக்கலாம். இடம் குறைவாக இருக்கின்ற இடங்களில் தென்மேற்கு சார்ந்த பகுதியில் கூண்டு அமைப்பை ஏற்படுத்தி படிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த படிக்கும் அந்த கூண்டு சார்ந்த கட்டிடத்திற்கும் தொடர்பு இல்லாமல் அமைக்கும் போது யோகத்தை செய்கிற வாஸ்து படியாக இருக்கும். ஒரு சிலர் தென்மேற்கு பகுதியில் படி அமைப்பது தவறு என்பார்கள். ஆனால் வாஸ்து விதிகளை உட்பகுத்தி அமைக்கும் பொழுது அது யோகத்தை செய்கிற படியாக தான் இருக்கும். இந்த விஷயங்கள் என்னைப்போல 15 வருடங்கள் பயணப்படுகிற வாஸ்து நிபுணர்களுக்கு தான் தெரியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நேற்று இன்று வந்த வாஸ்து மனிதர்களுக்கு  நிச்சயமாக தெரியாது.

The regulation of stairs in the building is very important.  It is better to build the road in the west direction in the north-west, in the south direction in the south-east, in the south direction in the south-east, in the west direction in the north-west, if there is a south road or in the case of a west road, in the south of the south-west part, and in the west of the south-west part.  In the north side, when it is installed externally, it should be installed in a hanging manner.  It can be set up as a pendant when setting up the outer door in the east side.  Or even set up without a hanging step.  In some places it is a good practice when it is converted into a system that gives yoga.  When there are more places in south-west oriented areas, hangings can be arranged in south-west oriented south and southwest-oriented west.  Where space is limited, steps should be made in the south-west direction by making a cage system.  When it is constructed in such a way, it is a vastu step that does yoga when it is constructed without connection to the staircase and the caged building.  Some people say that it is wrong to place a step in the south-west.  But when the rules of Vastu are analyzed and set, it will be the same as doing yoga.  These things are known only to Vastu experts who have been traveling for 15 years like me.  Vastu people who came yesterday and today definitely do not know that I have taken and overturned.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!