வாழ்க்கை பயணங்கள் வெற்றி வாஸ்து
தொழில்ல ஒரு வெற்றி வேண்டும் என்று சொன்னா அந்த இடத்துல அந்த தொழிற்சாலையோட இடத்துல நூறு சதவீதம் தென்மேற்கு 90 டிகிரிக்கு உள்ளே இருக்கணும். அதே போல வடமேற்கு அப்படிங்கிற ஒரு திசை 90 டிகிரிக்கு வரணும். இல்லன்னா வடக்கு மட்டும் ஒரு 120 டிகிரிக்கு வளர்ந்து இருக்கலாம் தவறு கிடையாது. அதேபோல தென்கிழக்கு திசை 90 டிகிரிக்கு கண்டிப்பாக இருக்கணும். இல்ல அப்படின்னு சொன்னா தென்கிழக்கு கிழக்கோட பகுதி 120 டிகிரி இருக்கணும். அதேபோல் வடகிழக்கு 90 டிகிரிக்கு இருக்கணும். இல்ல அப்படின்னு சொன்னா அது ஒரு 80° க்கு குறுகி இருக்கணும். அப்படி இருக்கின்ற பொழுது நிச்சயமாக அந்த இடத்தில் தொழில் முன்னேற்ற தடை இருக்காது . எப்படியாவது குட்டி கரணம் அடித்தாவது அவர்கள் வெற்றி பெறுவார்கள். இது கட்டிடத்துக்கும் பொருந்தும். கட்டிடத்தின் சுற்றுச் சுவருக்கும் பொருந்தும். அதாவது அங்கு இருக்கக்கூடிய மொத்த இடத்திற்கும் பொருந்தும். அதற்கு பிறகு தொழில்ல காட்ட வேண்டிய நான்கு விஷயங்கள்: மற்றும் இந்த நான்கு விஷயங்களை கொடுக்கிற நிகழ்வைதான் இந்த நான்கு திசையில் நான் சொன்ன விஷயங்கள் வாஸ்து ரீதியாக உங்களுக்கு உதவி செய்யும். தென்மேற்கு அப்படிங்கிற விஷயம் கஸ்டமர். அதாவது தக்க வைக்கும் நிகழ்வு கிடைக்கும்.
வட மேற்கு அப்படிங்கிற விஷயம் கஷ்டமரை கொடுக்கும். தென்கிழக்கு அப்படிங்கிற விஷயம் உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். வடகிழக்கு என்கிற திசை ஒரு போக்கஸ் ஒரு பார்வையை கொடுக்கும் . கண்ணாடி இருந்தா தான் கண் பார்வை கொஞ்சம் குறைபாடு இருக்கிறவங்களுக்கு கண்ணாடி போட்ட தான் தெரியும் . அப்போ அதுபோல இந்த கண்ணாடி போல தொழில் சார்ந்த பார்வை அதை செயல்படுற விஷயம் தான் வடகிழக்கு.ஆக தொழில் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் தேவை. அந்த நான்கு விஷயத்துல முதல்ல கஷ்டமர் கேட்க வேண்டும் என்பது போல உங்களோட ப்ராடக்ட் இருக்கணும்.. அடுத்து தொழில் நடந்தாலும் சிறப்பாக நடக்கணும்னு சொன்னா லாபம் முக்கியம். இப்ப லாபம் என்பது தான் ஒரு வாகனத்தை இயக்கும் பியூல் மாதிரி. இந்த பியூல் இருந்தால் தான் அந்த வாகனம் இயங்கும்.ஆக லாபம் இருந்தால் மட்டுமே ஒரு தொழில் தொடர்ந்து இயங்கும். அடுத்து மூணாவது விஷயம் காம்படிட்டர் அதாவது போட்டியாளர். உங்க தொழில் எப்படி? நீங்க எதுக்கு அதனை எந்த லெவலுக்கு கொண்டு போகணும்? அப்படிங்கற ஒரு அதாவது தொழில் போட்டியாளர் என்று சொல்கிற ஒரு நிகழ்வு. கிரிக்கெட் விளையாட போறீங்க. கிரிக்கெட் விளையாட போகிற பொழுது வாஸ்து ஜெகநாதன் வந்துட்டாரு யாரும் கேச் பிடிக்காதீர்கள். அவர் வந்து ரன் எடுக்கிற மாதிரி எல்லாம் கொடுங்க அப்படின்னு யாராவது சொல்லுவாங்களா?.
நிச்சயமா யாரும் சொல்ல மாட்டாங்க . அப்ப நீங்களே இப்போ அவுட் பண்ணி வெளிய அனுப்பனும் அப்படின்ற எண்ணம் வந்து விடும். அந்த இடத்தில் நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அல்லது உங்கள் போட்டியாளர் உங்கள் பொருளை விற்பனை செய்து விட்டு செல்லுங்கள் என சொல்லுவது போல உங்கள் பயணம் இருக்க வேண்டும். அதாவது உங்க பொருளை வித்துட்டு போங்க அப்புறம் நாங்க பார்க்கிறோம் அப்படிங்கற மாதிரி இருக்கணும். அடுத்து மிக மிக முக்கியம் ஒரு பத்தாயிரம் மணி நேரம் அதாவது ஒரு பத்து வருடங்கள் ஒரு துறையில நீங்க பயணம் பண்ணிட்டீங்கன்னு சொன்னா நிச்சயமாக அதுல நீங்க வெற்றியாளர் . அதில் நல்லது கெட்டது எல்லாமே தெரிந்த ஒரு மனிதராக அந்த இடத்தில் மாறியிருப்பீர்கள். 10 வருடம் கண்டிப்பாக ஒரு தொழில் தொடர்ந்து செய்தால் வெற்றி பெறலாம். அதை கடந்து நீங்க வெற்றி அடையலனா வாஸ்து சார்ந்த இந்த நான்கு இடத்தில் ஏதோ ஒரு விஷயம் தவறு உள்ளது என எடுத்து கொண்டு சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.