Panchabhuta Vastu
பஞ்சபூத வாஸ்து என்று சொல்லும் பொழுது, நீர், நிலம், காற்று, அக்னி, ஆகாயம் என்று சொல்லக்கூடிய ஐம்பூதங்களையும் ஒரு இல்லத்தில் உள்ளே கொண்டு வருகிற நிகழ்வு. அந்த வகையில் ஆகாயம் என்று சொல்லக்கூடிய அந்த பூதம் மற்ற நான்கு பூதங்களும் சுற்றி வருவதற்கு ஆகாயம் உதவுகிறது. மனிதனின் கேட்கின்ற திறமை இதை பொருத்தே அமைகின்றது. இனிய மென்மையான அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். அந்த வகையில் ஆகாய தத்துவத்தை ஒரு இல்லத்தில்நுழைக்கின்ற பொழுது அந்த வீட்டில் எதிரொலிக்கிற நிகழ்வு இருக்காது. எந்த வீட்டில் எதிரொலிக்கிற நிகழ்வு இருக்கிறதோ அந்த இடத்தில் ஆகாய சக்தி இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு இல்லத்தை அமைக்கும் பொழுது ஆகாய தத்துவம் உள்ளே நுழைகிற அமைப்பாக அமைக்க வேண்டும். அப்படி அமைக்கின்ற நிகழ்வு என்பது அறைகளின் அமைப்பை உயரம் மற்றும் அகலத்தில் சரியான முறையில், சரியான விகிதங்களில் ஜன்னல்களை அமைக்கும் பொழுது ஆகாய தத்துவத்தை ஒரு இல்லத்தில் உள்ளே நுழைக்க முடியும். இதனைத் தான் பஞ்சபூதத்தில் ஆகாய தத்துவ வாஸ்து என்று சொல்கின்றோம். அதேபோல அடுத்த ஒரு பஞ்சபூதமான வாயு என்கிற காற்று ஒரு இல்லத்தில் உள்ளே நுழைந்து வெளியே செல்ல வேண்டும். அதுவும் சரியான திசையில் நுழைந்து சரியான திசையில் வெளியேற வேண்டும். அடுத்து நெருப்பு என்று சொல்லக்கூடிய அக்னியை சரியான இடத்தில் பொருத்தி வைக்க வேண்டும். அதேபோல நீர் என்று சொல்லக்கூடிய நீர் தத்துவத்தை சரியான முறையில் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அதேபோல பூமி தத்துவம் என்று சொல்லக்கூடிய மண் தத்துவத்தை சரியான முறையில் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அதாவது நீரை வடகிழக்கிலும், நிலத்தை தென்மேற்கு பகுதியிலும், அக்னியை தென்கிழக்கிலும், வாயுவை வடமேற்கும் பிரம்மஸ்தானம் என்று சொல்லக்கூடிய பகுதி அடிபடாது இருக்குமாறு ஆகாய தத்துவத்தை இயக்க வேண்டும்.
When we say Panchabhuta Vastu, it is the event of bringing the five elements which can be called water, earth, air, fire and sky into a house. In that way, the goblin that can be called Aagaya helps the other four goblins to move around. The listening ability of man is based on this. Home should be a pleasant, soft and peaceful place. In that way, when the Agaya philosophy is applied to a house, there will be no reverberating phenomenon in that house. It should be understood that there is no air power in the house in which there is a resonant phenomenon. In that way, when setting up a house, it should be set up as a structure in which the air philosophy enters. The phenomenon of such arrangement is that the layout of the rooms in the right height and width, and the windows in the right proportions can bring the airy philosophy into a home. This is what we call Agaya Tattva Vastu in Panchabhuta. In the same way, a panchabhutamana vayu (air) must enter and exit a house. It should also enter in the right direction and exit in the right direction. Next, Agni, which can be called fire, should be fixed at the right place. Likewise, water philosophy, which can be called water, should be properly placed in the right place. Similarly soil philosophy which can be called Bhumi philosophy should be properly placed in the right place. That is, water should be placed in the north-east, land in the south-west, Agni in the south-east and Vayu in the north-west so that the area which can be called Brahmasthana should not be affected. Panchabhuta Vastu,Pancha Bootha Vastu,வாஸ்து மூலை பஞ்ச பூத சக்திகள்,அதிர்ஷ்டங்களை அருளும் பஞ்சபூத சக்திகள்,Discover the 5 elements of Vastu,Pancha bhutas ,