சென்னையில் வாஸ்து ஆலோசகர்
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 10.2.2025 குரோதி வருடம் தை மாதம் 28ந் தேதி. திங்கட்கிழமை.இரவு 6.59 மணி வரை வ.திரயோதசி திதி பிறகு சதுர்த்தசி திதி. மாலை 5.40 மணி வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம். யோகநாள் . சந்தரஷ்டமம் : மூலம் கேட்டை.
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கிற மூலை தான் வடகிழக்கு திசை என்று சொல்கின்றோம். இந்த மூலையில் எப்பொழுதுமே எடை என்பது இருக்கக் கூடாது. ஒருவர் தலை சுமையோடு எப்பொழுதுமே நடந்து கொண்டிருந்தால் ஒரு மனிதன் எவ்வளவு துன்பப்படுவானோ, அதுபோல கட்டிடத்தின் பலன்களும் அங்கு வசிக்கிற மக்களின் மீது இருக்கும். வீடு மற்றும் வியாபார நிறுவனம் மற்றும் தொழிற்சாலை இதில் எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டுக்கும் பலன்கள் என்பது ஒரே வகை தான். ஒரு வீட்டில் பழைய கட்டிடங்களில் ஈசான மூலையில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி இருந்தால் ஈசானிய பாரமாகும். ஈசானிய மூலையில் உதிர்ந்த உயர்ந்த மரம் இருந்தாலும் ஈசானிய பாரமே. அப்படி இருக்கின்ற இடங்களில் அந்த வீட்டில் இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு விபத்து சார்ந்த நிகழ்வுகளில் உயிர் கொடுக்குற நிகழ்வு நடந்திருக்கும். ஆக ஈசானிய தவறுகள் குடும்பத்தின் மூத்த குழந்தைகள் மீதும், குடும்ப ஆண்களின் மீதும் இருக்கும். அப்படி இருந்தால் ஆண்களுக்கு மன அழுத்தம் பள்ளி கல்வியை கல்லூரி கல்வியை முடிப்பதில் தடை ஏற்படும். தகுதிகள் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காது . தனிமையை விரும்பி வாழ்கிற வாழ்க்கை வாழ்கிற வாழ்க்கையை ஆண்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆக ஈசானியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே ஒருவரின் வாழ்க்கை என்பது மனிதர்களோடு இணைந்தது தான் வாழ்க்கை. இதில் ஜாதி மதம் மொழி என்பது தடையாக இருக்கக் கூடாது . ஆனால் வீடு தடையாக இருந்தால் அவருடைய வாழ்க்கை வெற்றி என்பது மிக மிக சிரமம். யாரோடும் ஒன்றி வாழ்க்கையை வாழ மாட்டார்கள். வாஸ்து வகையில் ஈசானியம் உங்களோடு ஒட்டி இருக்க வேண்டும் மற்ற கஷ்டங்களோடு ஒட்டி இருக்கக் கூடாது.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995
