Vastu style of kitchen design
சமையலறை அமைக்கின்ற வாஸ்து முறை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மனித வாழ்க்கையில் உணவு உடை இருப்பிடம் என்பது அத்தியாவசிய தேவை. மனிதன் உயிர் வாழ உணவு என்பது முக்கியம். அந்த வகையில் உணவே மருந்தாக செயல்படுகிறது என்று நம்முடைய சித்தர்கள் கூறியிருக்கின்றார்கள். வள்ளுவ பெருமான் கூட உண்ட உணவு செரிமானம் ஆன பிறகு அருந்துவதும், பசித்த பின் உணவு அருந்துவதும் மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் சமையலறை எங்கு வந்தால் சிறப்பு என்பது பற்றி வாஸ்து வகையில் தெரிந்து கொள்வோம். ஒரு இடத்தில் முதன்மை சமையலறையாக தென்கிழக்கு பகுதி விளங்குகிறது. அடுத்த நிலையில் வடமேற்கு பகுதி விளங்குகிறது. தஞ்சாவூர் பகுதிகளிலும், இலங்கை பகுதிகளிலும் வட கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைப்பார்கள். அதனை எக்காரணம் கொண்டும் அமைக்க கூடாது. அது மிகப்பெரிய தவறு. சமையல் அறையில் எப்பொழுதுமே இரண்டு ஜன்னல்கள் என்பது வேண்டும்.ஏன் என்று சொன்னால் சமையல் அறையில் தான் காற்று குறைவாக இருக்கும். அதிக நேரம் வீட்டில் இருக்க கூடிய பெண்கள் குறைந்தபட்சம் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக இருப்பார்கள். அந்த ஐந்து மணி நேரங்களும் அவர்களுக்கு காற்று என்பது சரியான முறையில் கிடைக்காது. அதுவே நோய் கூற்றின் துணைக்கு காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் சமையல் அறைக்கு நல்ல ஒரு காற்று ஓற்றம் என்பது வேண்டும். ஒரு காற்று ஓட்டம் என்பது வேண்டும் ஒரு சில மக்கள் காற்று அதிகமாக வீசினால் சமையலறையில் இருக்கிற அடுப்பு ஒழுங்காக எரியாது என்பதற்காக பெரிய அளவில் ஜன்னல்களை கொடுக்க மாட்டார்கள். நல்ல காற்றோட்ட புகை போக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாஸ்து வகையில் வடமேற்கு தென்கிழக்கு தவிர எந்த இடத்திலும் சமையல் அறை வரக்கூடாது. சமைக்கிற நிலை என்பது கிழக்கு பார்த்திருக்க வேண்டும். அதேபோல திசைகாட்டி அடிப்படையில் 125 டிகிரி இல் இருந்து 135 டிகிரி 145 டிகிரி வரையிலும் சமையலறை இருக்கலாம். அதே போல வடமேற்கு பகுதி என்று சொன்னால் 305 டிகிரியில் இருந்தும் 325 டிகிரி வரையிலும் இருக்கலாம். Vastu style of kitchen design,Kitchen stove direction as per Vastu,Vastu for kitchen sink and stove,South west kitchen vastu,Kitchen sink direction as per Vastu,Remedy for kitchen sink in south direction,North west kitchen Vastu,