கிரகப்பிரவேசம் வாஸ்து

கிரகப்பிரவேசம் வாஸ்து

இல்லத்திற்கு கிரகப்பிரவேசம் செய்யும் முறை பற்றி வாஸ்து தெரிந்து கொள்வோம். இதுவும் வாஸ்து வகையில் இருப்பது சாலச்சிறந்தது என்று சொல்வேன். அந்த வகையில் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்ய வேண்டும். எப்பொழுதுமே இந்த கிரகப்பிரவேசம் முறை என்பது எப்பொழுதுமே காலையில் செய்வது நலம். காலை 10 மணிக்கு உள்ளாக முடிந்து விடுவதும் நலம். காலை 5 மணிக்கு மேலாக தொடங்குவதும் நலம். ஒரு சில மக்கள் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள் அந்த பிரம்ம முகூர்த்தத்தின் நிலையை கவனித்து செயல்பட வேண்டும். அதாவது வெள்ளிக்கிழமை தாராளமாக பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம். சனிக்கிழமை செய்ய மாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை செய்கின்ற பொழுது அந்த பிரம்மா முகூர்த்தத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால் ஞாயிற்றுக்கிழமை என்பது சூரியன் உதித்தால் மட்டுமே கணக்கு. சூரியன் உதித்த பிறகுதான் ஞாயிறு என்கிற கிழமை தொடங்குகிறது . நீங்கள் சூரியன் உதிக்காத போது சனிக்கிழமை தான் ஆக சனிக்கிழமை செய்கிற ஒரு நிகழ்வாக இருக்கும்.அதனை தவிர்க்க வேண்டும். புதன் கிழமைக்கும் அந்த விதி பொருந்தும் புதன்கிழமைகளும் சூரியன் உதயமானால் தான் புதன்கிழமைக்கு கணக்கு. புதன்கிழமை சூரிய உதயம் என்பது விடிந்த பிறகு தான். புதன்கிழமை விடியற்காலையில் செய்கின்ற பொழுது அது செவ்வாய்க்கிழமைக்கு தான் சேரும். அதை கவனத்தில் கொண்டு இந்த கிரகப்பிரவேச நேரத்தை முடிவு செய்து செய்வது சாலச் சிறந்தது என்று சொல்வேன். எப்பொழுதுமே அதை கவனத்தில் கொள்வது நலம்.

Let’s know Vastu about the method of planetary entry to the house.  I would say that this is also best in Vastu style.  In that way, Grahapravesam to the house should be done at the right time and in the right manner.  It is always good to do this Grahapravesam method in the morning.  It is also better to finish inside by 10 am.  Better to start after 5 am.  Some people say that Brahma Mugurtha should be observed and acted upon.  That means it can be done liberally in Brahma Mugurtha on Friday.  They won’t do it on Saturday.  While performing on Sunday, the Brahma Mugurtha should be taken into consideration.  Because Sunday is only counted when the sun rises.  Sunday begins after sunrise.  It is an event that you do on Saturday when the sun does not rise.  If the sun rises on Wednesday and on Wednesdays to which that rule applies, Wednesday is counted.  Sunrise on Wednesday is just after dawn.  If it is done on Wednesday morning, it will be added to Tuesday only.  I would say that it is best to decide this planetary entry time keeping that in mind.  It is always good to be aware of that.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!