காம்பவுண்ட் சுவர் வாஸ்து Compound Wall Vastu

காம்பவுண்ட் சுவர் வாஸ்து Compound Wall Vastu

காம்பவுண்ட் சுவர் உயரங்களுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது காம்பௌண்ட் சுவர் உயரங்களை சிலர் மனம் போன போக்கில் வைத்துள்ளார்கள்.  மனம் போன போக்கு என்று சொல்லும் பொழுது கிழக்கு உயரமாகவும் வடக்கில் உயரமாகவும் தெற்கு மேற்கில் குறைந்த உயரமாக வைப்பார்கள். எக்காரணம் கொண்டும் அது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. அந்த வகையில் சுற்றுச்சுவர் உயரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்கும் பொழுது சுற்றுச்சுவரின் உயரம் தெற்கில் எப்பொழுதுமே அதிகமாக இருக்க வேண்டும். அதனை விட தாழ்த்தி மேற்கு புறத்தில் வைக்கலாம். அதனை விட அரை அடிகள் தாழ்த்தி கிழக்கு புறத்தில் வைக்கலாம். எல்லா திசைகளையும் விட குறைந்த உயரத்தில் வடக்கு பகுதியில் வைக்க வேண்டும். வடக்கில் சாலை இருந்தாலும் சரி வேறொருவர் மனை இருந்தாலும் சரி, வடக்கு திசையில் சுற்றுச்சுவர் என்பது குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஒரு சில மக்கள் வீடு இருக்கிற பகுதிகளில் உயரம் அதிகமாகவும், வீடு இல்லாத பகுதிகளில் உயரம் குறைவாகும் வைப்பார்கள். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது.  மற்றவரின் வீடு பக்கத்தில் இருந்தாலும் சரி, வீடு இல்லாவிட்டாலும் சரி எப்பொழுதுமே அந்த சுற்றுச்சுவர் என்று சொல்லக்கூடிய காம்பௌண்ட் சுவரின் உயரம் என்பது வாஸ்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நான்கு பக்கமும் சமமாக கூட வைத்துக் கொள்ளலாம் அல்லது, தெற்கிலும் மேற்கிலும் ஒரே உயரமாகவும் அதனை விட தாழ்ந்த அமைப்பில் வடக்கிலும் கிழக்கிலும் வைத்துக் கொள்ளலாம். இந்த விதிகளை தவறி ஒரு சுற்றுச்சுவர் அமைப்பு என்பது எக்காரணம் கொண்டும் மாறிவிடக்கூடாது. அப்படி மாறுகின்ற பொழுது வாஸ்து வகையில் குற்றமாக மாறிவிடும்.

When looking at the compound wall heights as Vastu, some people keep the compound wall heights in mind. When they say that the mind has lost its direction, they put it as high in the east, high in the north and low in the south west. Do not do such things for any reason. In that way, when looking at how the height of the perimeter wall should be, the height of the perimeter wall should always be higher in the south. It can be lower than that and placed on the west side. It can be lowered by half feet and placed on the east side. North should be placed at a lower height than all directions. Whether there is a road in the north or someone else’s land, the perimeter wall in the north direction should be low. Some people put the height higher in areas with houses and lower in areas without houses. Don’t do those mistakes for any reason. The height of the compound wall which can be said to be the perimeter wall, whether adjacent to another’s house or not, should always be as per Vastu norms. For any reason, the four sides can be kept equal, or the same height in the south and west and a lower structure in the north and east. A perimeter system may not be altered for any reason in violation of these rules. When it changes like that, it becomes criminal in terms of Vastu.

காம்பவுண்ட் சுவர் வாஸ்து, Compound Wall Vastu,வீட்டு காம்பவுண்டு சுவர் கட்டும் விதி,வாஸ்து குறிப்பிடும் ‘காம்பவுண்டு’ சுவர்,Space between compound wall and house as per Vastu,Vastu for compound wall gate,Common compound wall rules,Compound wall gate size as per Vastu,Compound wall vastu in Tamil,Size of main gate as per Vastu,Compound wall height Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!