கழிவறை வாஸ்து

வாஸ்து சாஸ்திர வகையில் கழிவறைகளை அமைப்பது எந்த திசையில் எங்கு அமைக்க வேண்டும் என்கிற வாஸ்து விதிகள் மிக மிக முக்கியம். அந்த விதிகளை உட்புகத்தாமல் ஒரு கழிவறை சார்ந்த அமைப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. வீடுகளில் உட்புறப் பகுதிகளில் அதிக வாஸ்து குற்றங்களை கொடுப்பது கழிவறையும் சமையலறையும் தான் . அதை சரியாக அமைக்கும் பொழுது வீட்டுக்குள்ளாக 100% வாஸ்து பார்க்கிறோம் என்று சொன்னால் அது நிறைவடைந்து விடும். அந்த வகையில் கழிவறை என்பது இன்றைக்கு குளியல் அறையில் சேர்த்து அமைக்கிறார்கள். ஒருவேளை தனியாக ஒரு சில இடங்களில் அமைக்கின்ற பொழுது அந்த இடத்தின் தேர்வு என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் கழிவறை  முதல் தரமாக வடமேற்கு மூலையில் இல்லாமல் வடமேற்கு சார்ந்த மேற்கிலும் , வடக்கு சார்ந்த வடமேற்கிழும்  அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த அறை சீலிங் என்கிற ஒரு விஷயம் தாழ்த்தி அமைக்க கூடாது. அதை மற்றொரு அறையில் இருந்து அந்த சீலிங்கில் சில பொருட்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு தாழ்ந்த தள அமைப்பு ஏற்படுத்தி விடக்கூடாது . அதே சமயம் தரை தளத்திலும் அதனுடைய உயரம் அதிகப்படுத்துவதோ அல்லது, அதன் உயரம் தாழ்ந்த அமைப்பில் ஏற்படுத்திக் கொள்வதோ தவறு. எக்காரணம் கொண்டும் அதை சரியான முறையில் செய்ய வேண்டும். அதேபோல அந்த கழிவு அறை பீங்கான் கோப்பைகளை வடக்கு பார்த்தோ, தெற்கு பார்த்தோ அமரும் அமைப்பாக அமைத்துக் கொள்வது வாஸ்து ரீதியாக நல்லது. இந்த இடத்தில் ராமாயணத்தில் ஒரு வரி வருகிறது சூரியனைப் பார்த்து மலம் ஜலம் கழிக்கும் மூடனல்ல நான் என்று ஒரு வார்த்தை வருகிறது . ஆக இந்த இடத்தில் கழிவறையில் மலம் ஜலம் கழிப்பது என்பது வடக்கு பார்த்தோ தெற்கு பார்த்தோ அமைத்துக் கொள்ளலாம். அந்த இடமும் அந்த திசையும் வாஸ்து வகையில் மிக மிக முக்கியம். அது சரியாக அமைப்பில் பொருத்தி கழிப்பறை சார்ந்த விஷயத்தில் 100 மதிப்பெண்களை பெற்று சரியான முறையில் வீட்டை கட்டிக் கொள்ளுங்கள்.

According to Vastu Shastra, the Vastu rules of which direction and where to set up toilets are very important.  A toilet system should not be established without incorporating those rules.  Bathrooms and kitchens give the most Vastu offenses in the interior areas of houses.  When it is set properly, if we say that we see 100% Vastu inside the house, it will be complete.  In that way, the toilet is added to the bathroom today.  Perhaps when setting up in a few places alone, the choice of the place is very important.  In that way, the toilet can be set up in the north-west corner of the north-west corner and in the north-west corner instead of the first standard.  When setting up in that way, one thing called the ceiling of the room should not be set low.  It should not be made a low floor structure so that some items can be placed on the ceiling from another room.  At the same time, it is wrong to increase its height on the ground floor or to make its height lower.  Whatever the reason, it should be done in the right way.  Similarly, it is architecturally good to arrange the waste room ceramic cups in a sitting arrangement facing north or south.  At this place a line comes in the Ramayana and a word comes that I am not a fool who looks at the sun and defecates.  So, in this place, the toilet can be installed facing North or South.  That place and that direction are very important in terms of Vastu.  Match it correctly and get 100 marks in toilet related subject and build the house in proper way.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!