அப்பார்ட்மெண்ட் வீட்டில் வாஸ்து

அப்பார்ட்மெண்ட் வீடுகளுக்கு வாஸ்து இருக்கிறதா? என்கிற ஒரு கேள்வியை ஒருவர் கேட்கின்ற பொழுது 100% இருக்கிறது என்று சொல்லி தவறான அமைப்பில் வீடுகளை விற்கின்ற ரியல் எஸ்டேட் வியாபாரிகள் இருக்கிறார்கள். ஒரு அப்பார்ட்மெண்ட் இடத்தில் வடகிழக்கில் தண்ணீர் சார்ந்த விஷயங்கள், வடமேற்கு தென்கிழக்கு சமையல் சார்ந்த விஷயங்கள், தென்மேற்கு படுக்கை அறை சார்ந்த விஷயங்கள் அமைத்துக் கொண்டால் வாஸ்து வந்து விட்டது என்கின்றனர். ஆக ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகள் வகையில் குறைந்த பட்சம் இரண்டு வீடுகளும், நான்கு வீடுகளும், ஆறு வீடுகளும், ஏன் எட்டு வீடுகளும், 10 வீடுகளும், ஏன் 20, 30 , 40 எண்ணிக்கைகள் வீடுகள் இருக்கும். இப்படி இருக்கின்ற வீடுகளில் அதன் எண்ணிக்கையை பொறுத்து, அதாவது இரண்டு வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் ஒரு தளத்தில் அதில் ஒரு வீட்டுக்கு மட்டும் வாஸ்து பொருந்தும். அதேபோல நான்கு வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் அந்த இடத்திலும் ஒரு இல்லத்திற்கு மட்டும் வாஸ்து பொருந்தும். ஆறு வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் இரண்டு வீடுகளுக்கு மட்டும் வாஸ்து பொருந்தி வரும். எட்டு வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் எட்டு வீடுகளில் மூன்று வீடுகளுக்கு மட்டும் வாஸ்து பொருந்தும். பத்து வீடுகளுக்கு என்று சொன்னால் நான்கு வீடுகளுக்கு மட்டும் வாஸ்து பொருந்தும். 20 வீடுகள் இருக்கின்ற இடத்தில் ஒரு ஆறு ஏழு வீடுகளுக்கு மட்டும் வாஸ்து பொருந்தி வரும். 30 வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் பத்து வீடுகள் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அதில் கூட இருக்கும் அமைப்பை பொறுத்து இரண்டு மூன்று வீடுகள் மட்டுமே பொருந்தக்கூடிய அமைப்பில் ஒரு தளத்தில் இருக்கும். ஆக கண்ணை மூடிக்கொண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்குகிற மக்கள் நேரடியாக வாங்க வேண்டாம். இந்த இடத்தில் யாராவது ஒரு வாஸ்து நிபுணரை வாஸ்து ஆலோசனைக்கு வைத்துக்கொண்டு வாங்குகின்ற பொழுது மிகுந்த யோகத்தைச் செய்த அப்பார்ட்மெண்ட் வீடுகளாக இருக்கும்.
When someone asks a question like, is there Vastu for apartment houses? There are real estate agents who sell houses in a wrong configuration by saying that it is 100%. They say that if water-related matters are arranged in the northeast, kitchen-related matters in the northwest, and bedroom-related matters in the southwest, then Vastu has arrived. So, in an apartment house, there are at least two houses, four houses, six houses, why eight houses, 10 houses, why 20, 30, 40 houses. Depending on the number of houses in such a house, if we say that there are two houses, Vastu is applicable to only one house on a floor. Similarly, if we say that there are four houses, Vastu is applicable to only one house on that floor. If we say that there are six houses, Vastu is applicable to only two of them. If we say that there are eight houses, Vastu is applicable to only three of the eight houses. If you say for ten houses, Vastu will be applicable for only four houses. Where there are 20 houses, Vastu will be applicable for only six or seven houses. If you say there are 30 houses, it cannot be said that ten houses will be applicable. Depending on the layout, only two or three houses will be suitable for one floor. Therefore, people who buy apartment houses with their eyes closed should not buy directly. In this place, when someone buys by consulting a Vastu expert, they will be apartment houses that have done a lot of yoga.