Many people ask me where the sewage water, that is, the water we use, should go out. No matter which direction the house faces, it would be a good idea to go out from there to the northeast. It is a little difficult to arrange this in west-facing and south-facing houses. However, in those houses, it will be correct in terms of Vastu only when a sewage path is created in the northeast and sent out through the chamber in that place. If you decide to send it directly to west-facing and south-facing houses, it is very good in terms of Vastu to arrange it so that the sewage goes from the north, that is, from the northwest, to the road in a west-facing house, and from the fire corner of the house to the road in a south-facing house.
கழிவுநீர் தண்ணீர் அதாவது நாம் உபயோகித்த தண்ணீர் எங்கு வெளியேற வேண்டும் என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்பார்கள். எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் வடகிழக்கு பகுதிக்குச் சென்ற பிறகு அதிலிருந்து வெளியே சென்றால் சரியான ஒரு விஷயமாக இருக்கும். மேற்கு பார்த்த, தெற்கு பார்த்த வீடுகளில் இதனை கொஞ்சம் அமைப்பது சிரமம். இருந்தாலும் அந்த வீடுகளில் வடகிழக்கு பகுதிக்கு கழிவுநீர் செல்லும் பாதையை ஏற்படுத்தி அந்த இடத்தில் இருக்கும் சேம்பர் வழியாக வெளியே அனுப்புகின்ற போதுதான் வாஸ்து வகையில் அது சரியானதாக இருக்கும். ஒருவேளை நேரடியாக மேற்கு பார்த்த, தெற்கு பார்த்த வீடுகளில் அனுப்ப முடிவு செய்தால் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடக்கு அதாவது, வடமேற்கு பகுதியிலிருந்து சாலைக்கு செல்வது போலவும், தெற்கு பார்த்து வீட்டில் அக்னி மூலையில் இருந்து கழிவு நீர் சாலைக்கு செல்வது போலவும் அமைத்துக் கொள்வது வாஸ்து வகையில் சாலச் சிறந்தது. வீட்டில் உபயோகித்த தண்ணீர் எங்கே செல்ல வேண்டும்,
