வீடு கட்ட வாஸ்து நிபுணர் தேவையா?

  • வாஸ்து வகையில் ஒரு புதிய வீடு கட்டுகின்ற பொழுது ஒரு வாஸ்து நிபுணரை பார்க்க வேண்டும் என்ற ஒரு முடிவு ஒரு சில நேரங்களில் மக்களுக்கு வருவது கிடையாது. கட்டிடம் கட்டும் வேலையை வேலையை செய்து கொண்டிருப்பார்கள். அந்த வேலையில் ஒரு சந்தேகம் வரும். அந்த சந்தேகத்தை முடிவு செய்வதற்கு பல பேரிடம் கேட்பார்கள். குறிப்பாக இன்ஜினியர் மற்றும், மேஸ்திரி கொத்தனார் அல்லது, தனக்குத் தெரிந்த விஷயம் அல்லது, நண்பர்கள் இடம் கேட்பார்கள். அவர்களிடமும் அவருக்கு விடை கொடுக்கக்கூடிய ஒரு பதில் என்பது வராது. அந்த இடத்தில் ஒரு வாஸ்து மனிதரை அழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது அந்த பவாஸ்து நிபுணருக்கே அந்த கட்டிட விஷயத்தில் தீர்வு கொடுக்கிற நிலைமை என்பது அந்த இடத்தில் இருக்காது ஒரு கட்டிட அமைப்பு என்பது பெரிய அளவில் வரக்கூடாத இடத்தில் வந்து இருக்கும். அதை உடைப்பது என்பது கடினம். உடைக்கவும் முடியாது. அப்படி இருக்கின்ற பொழுது, இந்த முடிவை செய்வதில் வாஸ்து நிபுணரை நீங்கள் வைத்துக் கொண்டாலும் கூட கஷ்டம் தான். ஆகவே இந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணருக்கு பணம் கொடுப்பதை யோசிக்க கூடாது என்று சொல்லுவேன். அது நானாக இருந்தாலும் சரி வேறொரு வாஸ்து மனிதரை அழைக்கின்றீர்கள் என்று சொன்னாலும் சரி, பணத்தை யோசிக்க கூடாது. பெரிய அளவில் நம்ம கட்டிடம் கட்டுகின்றோம் லட்சக்கணக்கில் பணம் போட்டு செலவு செய்து கட்டிடத்தை கட்டுகின்றோம். அந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணர் வருகிறார் என்று சொன்னால், அவர் நீங்கள் ஒரு வரைபடம் வரைந்த பிறகு அந்த இடத்தை அவரிடம் காட்ட வேண்டும் என்று சொல்வேன். ஏனென்று சொன்னால் நீங்கள் செய்கிற அந்த கட்டிடத்தின் தவறை முதலிலேயே அவர் சுட்டிக்காட்டுவார். அதிலிருந்து நீங்கள் வெளியேற முடியும் அதே சமயம் நீங்கள் அவரிடம் காட்ட வில்லை என்று சொன்னால் அந்த தவறு பெரிய அளவில் வளர்ந்து நிற்கும். அந்த தவறை திருத்துவது கூட வாஸ்து ஆலோசகர் வந்தாலும் முடியாது என்பது தான் எனது கருத்து. இது முழுக்க முழுக்க வாஸ்து விழிப்புணர்வு சார்ந்த கருத்து. ஆக இந்த இடத்தில் செலவு செய்வதற்கு தயங்க வேண்டாம். பணம் உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் கூட. ஒரு சிலருக்கு பணம் இருக்கும், ஒரு சிலருக்கு பணம் இருக்காது, பணம் இல்லை என்றாலும் கூட அந்த பண சிரமத்தை பார்க்க வேண்டாம். இந்த பணத்தை உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அங்கு வருகிற வாஸ்து ஆலோசகர் உங்களுக்கு சேமிப்பு தான் செய்து கொடுப்பார். அந்த சேமிப்பு என்பது உங்களுடைய கண்களுக்கு தெரியாது. நான் பயணப்படுகிற இடங்களில் இதை உணர்ந்திருக்கிறேன்.

    When building a new house in terms of Vastu, sometimes people do not come to the decision to see a Vastu expert. They are doing the work of building a building. A doubt arises in that work. To resolve that doubt, they ask many people. Especially engineers and masons or, they ask about something they know or their friends. They do not get an answer that can answer them. They call a Vastu person at that place. When they call like that, the situation that the Vastu expert can provide a solution to that building matter is not at that place. A building structure is in a place where it should not be in a large scale. It is difficult to break it. It is impossible to break it. In such a situation, even if you hire a Vastu expert to make this decision, it is difficult. Therefore, I would say that you should not think about paying a Vastu expert at this place. Whether it is me or you say that you are calling another Vastu person, you should not think about money. We build our buildings on a large scale, we spend lakhs of money and build the building. If you say that a Vastu expert is coming to that place, I will tell you that you should draw a map and then show him the place. If you say why, he will point out the mistake you are making in that building right from the start. You can get out of it, but if you say that you did not show him, the mistake will grow to a large extent. My opinion is that even if a Vastu consultant comes, it will not be possible to correct that mistake. This is entirely based on Vastu awareness. So do not hesitate to spend money at this place. Even if money is a problem for you. Some people have money, some do not have money, and even if they do not have money, do not look at that money problem. The Vastu consultant who comes there will save you this money in some way. Your eyes do not see that saving. I have felt this in the places I travel.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!